சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு – சமூக பொதுநல இயக்கம் புகார்.

குமரி மாவட்ட தோவாளை கால்வாய் அருகே கொட்டப்படும் குப்பைகளால் ஏற்பட்ட நீர் மாசுபாடு

குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனநீர் வெளியேறும் தோவாளை கால்வாய் மூலம் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 17,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இருப்பினும் இக்கால்வாய் சரிவர சீரமைக்காத நிலையில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறுவதும், விவசாயிகள் பாதிப்பு அடைவதும் வாடிக்கையாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க இக்கால்வாயில் கலக்கும் கழிவுநீர் மூலம் நீர் மாசுபட்டு அதன் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் இதனை குடிநீராக பயன்படுத்துவோரும், விவசாயிகளும் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

செண்பகராமன்புதூர் அருகே இக்கால்வாய் அமைந்துள்ள பகுதியில் கழிவு குப்பைகள், உணவு, இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் தேங்கி கிடக்கின்றன. இவை துர்நாற்றம் வீசி வருவதோடு இதனால் பல்வேறு பாதிப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. குப்பைகளில் உள்ள ரசாயன மற்றும் கன உலோகங்கள் தோவாளை கால்வாய் மற்றும் இதையொட்டி உள்ள உப்பாற்று ஓடை நீரில் கலப்பதால் அந்நீர் நச்சாக மாறுகிறது. இதன் பாதிப்பினால் நீரின் ஆக்சிஜன் அளவு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது.

இதன் மூலம் உணவு சங்கிலி தடைபடுவதால் பல்லுயிர் இழப்பு ஏற்படுவதோடு நீர் ஆதாரங்களே நிர்மூலம் ஆகும் நிலைக்கு தள்ளப்படும். மாசுபட்ட இந்நீரால் வயிற்றுபோக்கு, கொள்ளை நோய்கள், டைபாய்டு, ஹெபடைடிஸ், தோல் பிரச்னைகள் ஏற்படுவதோடு புற்றுநோய், நரம்பு பாதிப்பு இனப்பெருக்க பிரச்னைகள் வரையில் ஏற்படும் சூழல் உள்ளது. நிலத்தடி நீர் மற்றும் மண் மாசுபாடு காரணமாக குடிநீர் மற்றும் விவசாயத்தை பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

இப்பகுதியில் செயல்படும் பன்றி பண்ணையின் கழிவுகள் மற்றும் கொட்டப்படும் கழிவுகளால் நீர், நிலம், காற்று என சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, மனித ஆரோக்கியம் மற்றும் விவசாயம் கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ள நிலையில் நீர்நிலை மாசுபாட்டை உடனடியாக தடுத்திட வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் கழிவு குப்பைகள் கொட்டப்படுவது முழுமையாக தடைசெய்வதோடு மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தலைமை நிலைய செயலாளர் S.ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், துணைப்பொதுச்செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரி கோட்ட செயலாளர் M அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Pசந்திரா, குமரி (கிழக்கு) மாவட்ட தலைவர் T குழந்தைசாமி, செயலாளர்

R. சாராபாய், பொருளாளர் பொன்.மாரியம்மாள், அமைப்பு செயலாளர் C.V.முருகன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

தோவாளை கால்வாய் மாசுபாடு – குப்பைகளால் சுகாதார சீர்கேடு அதிகரிப்பு
குமரி மாவட்ட தோவாளை கால்வாயில் குப்பை கொட்டுதல் – நடவடிக்கை கோரும் சமூக பொதுநல இயக்கம்
நீர் மாசுபாடு மற்றும் சுகாதார ஆபத்து – தோவாளை கால்வாய் குறித்து புகார்
தோவாளை கால்வாயை காப்போம் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு கோரிக்கை
குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகளால் பாதிக்கப்படும் தோவாளை கால்வாய்
தோவாளை கால்வாய் அருகே சட்டவிரோத குப்பை கொட்டுதல் – கடும் நடவடிக்கை தேவை
குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரம் ஆபத்தில் – தோவாளை கால்வாய் மாசுபாடு
நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் விவசாயத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் தோவாளை கால்வாய்
பொதுச் சுகாதாரத்தை பாதிக்கும் தோவாளை கால்வாய் மாசுபாடு
தோவாளை கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *