குமரி மாவட்டம் தோவாளை ஒன்றியம் செண்பகராமன்புதூர் ஊராட்சி பகுதியில் கலைவாணர்.என்.எஸ்.கே பாலிடெக்னிக் அருகே காட்டுமடம் பேருந்து நிறுத்தம் உள்ளது. செண்பகராமன்புதூர் வரும் பேருந்துகள் இங்கிருந்தே நாகர்கோவிலுக்கு புறப்பட்டு செல்கின்றன. இதன் அருகில் மேம்படுத்தப்பட்ட அரசு சுகாதார நிலையம், பல்வேறு கிராமங்கள் உள்ள நிலையில் இப்பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பேருந்திற்காக காத்திருந்து செல்கின்றனர்.
இவர்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் பேருந்திற்காக பாதுகாப்பாக காத்திருக்கும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட நிழலகத்தை பொதுமக்கள் பயன்படுத்திட இயல்வதில்லை. காரணம் குறிப்பிட்ட நிழலகத்தில் இட்லிகடைக்கு என நடத்த ஒதுக்கப்பட்டு அது நடந்துவரும் நிலையில் குறிப்பிட்ட பகுதியில் பயணிகள் ஒதுங்க இயல்வதில்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் நிழலகம் இருந்தும் பொதுமக்கள் பயன்படுத்திட இயலாத நிலையே உள்ளது.
இப்பகுதியில் ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ 50 ஆயிரம் செலவில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுப் அவை பூட்டப்பட்ட நிலையில் காட்சிப் பொருளாக காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இச்சுகாதார வளாகத்தினை பயன்படுத்திட இயலாத நிலையில் மக்கள் பணம் விரயமாகி பயன்பாடற்ற வகையில் உள்ளது. மக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட நிழலகம் தனிநபர் தேவைக்கென விடப்பட்டது ஏன்? வருமான நோக்கில் மக்கள் பயன்பாட்டை மறந்து வணிக நோக்கில் ஒதுக்கியது ஏற்றுக் கொள்ள இயலாது.
பேருந்து நிறுத்தத்தில் கடைகளை பார்த்திருப்போம். ஆனால் பேருந்து நிறுத்தமே கடைகளாகிப் போனது விந்தையாக உள்ளது. எனவே மக்கள் பணத்தில், மக்கள் பயன்பாட்டிற்காக, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்ட பயணிகள் நிழலகம் தனிநபர்களுக்கு கொடுக்கப்பட்டதை தடை செய்து மக்கள் பயன்படுத்திடும் விதத்தில் ஒதுக்கிட வேண்டும். மேலும் பூட்டப்பட்ட நிலையில் உள்ள சுகாதார வளாகத்தினையும் பொதுமக்கள் பயன்படுத்திடும் வகையில் பராமரித்து செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் R. சாராபாய், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் M. மரிய அற்புதம், செயலாளர் Y.ராகுல், செண்பகராமன்புதூர் பஞ், செயலாளர் R.சிவகுமார் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply