சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

முடங்கி கிடக்கும் முல்லையாறு அருவித் திட்டத்தை தொடங்கிடுக – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

குமரி மாவட்டத்தில் நீர்வள பாதுகாப்பிற்கான தடுப்பணை அமைப்பு

குமரி மாவட்டத்தின் குற்றாலம் என அழைக்கப்படுவது திற்பரப்பு அருவி. இதனைப் போல மாவட்டத்தில் எண்ணற்ற அருவிகள் உள்ள போதும் அதனை மேம்படுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அவை கானகத்தில் பூத்த மல்லிகைப்பூவாய் கண்டு கொள்ளாத வகையில் உள்ளன. பிரதான சுற்றுலா தலங்களை மட்டுமே வெளிச்சப்படுத்தும் சுற்றுலாத்துறை குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளையும் விளம்பரபடுத்தவோ, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவோ உரிய அக்கறை காட்டுவதில்லை. இதனால் பல்வேறு இடங்களையும் அறிந்து கண்டுகளிக்க வருவோர் பல்வேறு சிரமங்கள் மத்தியில் குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து செல்லும் பரிதாப நிலையே உள்ளது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் முல்லையாறு அருவி மிகவும் சிறப்பு பெற்றது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான ஐந்துளி மலையில் இருந்து உற்பத்தியாகி மாலைக்கோடு, அண்டுகோடு, கடமக்கோடு வழியாக திக்குறிச்சி அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது முல்லையாறு. இந்தஆறு மாலைக்கோடு அருகே பல்லிக் கூட்டம் என்ற இடத்தில் அருவியாய் கொட்டுகிறது. இப்பகுதியில் தடுப்பணை கட்டி இதையொட்டி உள்ள பாறைகளை சீர்படுத்தினால் இங்கு சுமார் 50 அடி உயரமான அழகான அருவி உருவாக்கிட இயலும். இது தொடர்பாக கடந்த 1986 ல் இங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி இங்கு அருவி அமைந்தால் சிறப்பான சுற்றுலாத்தலமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை உறுதிபடுத்தினர். மேலும் இந்த அருவியின் மூலம் வலது கரைக்கால்வாய் மூலம் மேல் பாலை, தேவிகோடு, மாங்காலை, இளஞ்சிறை வழியாக ராமவர்மன் சிறை வரையிலும் இடதுகரைக் கால்வாய் மூலம் முக்கூட்டுகல், காரோடு வழியாக அருமனை வரையிலும் நீரை கொண்டு செல்வதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் எனவும் இத்திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இத்திட்டம் இதுநாள்வரையில் செயல்படுத்தப்படாமல் முடங்கிய நிலையிலேயே உள்ளது. நெய்யாறு இடதுகரைக் கால்வாயில் நீர் விட கேரளம் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில் இடதுகரைக்கால்வாயிற்கு இந்த நீரை திருப்பி விடுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் அரசு திரும்பி பார்க்கவில்லை என இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் பல்லிக் கூட்டம் பகுதியில் மக்கள் பயன்பெறும் வகையில் முல்லையாறு அருவித் திட்டத்தினை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா. அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் CV.முருகன், மகளிர் அணிச் செயலாளர் R.சாராபாய் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

முல்லையாறு அருவித் திட்டம்: 40 ஆண்டுகளாக காத்திருக்கும் மக்கள்
குமரியின் மறைக்கப்பட்ட சுற்றுலா பொக்கிஷம் முல்லையாறு
முடங்கிய முல்லையாறு திட்டத்தை உயிர்ப்பிக்குமா அரசு?
சுற்றுலாவும் நீர்வளமும் தரும் முல்லையாறு அருவி திட்டம்
பல்லிக்கூட்டம் பகுதியில் புதிய சுற்றுலா மையம் உருவாகுமா?
முல்லையாறு அருவி: குமரி மாவட்ட வளர்ச்சிக்கான வாய்ப்பு
நிலத்தடி நீரை உயர்த்தும் முல்லையாறு திட்டம்
முல்லையாறு அருவி திட்டம் செயல்பட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *