சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
குமரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் கும்பபூ சாகுபடிக்கு என அணை நீர் திறக்கப்பட்ட போதும் கடை வரம்பு பகுதி நிலங்களுக்கு இதுவரை நீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அணைகளுக்கும், குளங்களுக்கும் இடைப்பட்ட அளவில் உள்ளவை கால்வாய்கள். இவையே மாவட்டத்தின் இரத்த நாளங்களாய் எல்லாப் பகுதியில் உள்ள நீர்நிலை களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் நீரை கொண்டுபோய் சேர்க்கின்றன.
தோவாளை கால்வாய் 49.1கி.மீ மூலம் 4800 ஏக்கர் நிலமும், 5.79 கி.மீ உள்ள நிலப்பாறை கால்வாய் மூலம் 5750 ஏக்கர் நிலமும், 1.4கி.மீ கொண்ட மருந்து வாழ் மலை கால்வாய் மூலம் 1400 ஏக்கர் நிலமும், 3கி.மீ கொண்ட கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 300 ஏக்கர் நிலமும், 3 கி.மீ கொண்ட கிழக்கு கிளைகால்வாய் மூலம் 230 ஏக்கர் நிலமும், 3 கி.மீ உடைய.மேற்கு கிளை கால்வாய் மூலம் 290 ஏக்கர், 3கி.மீ கொண்ட மேற்கு கிளை கால்வாய் மூலம் 770 ஏக்கர், 6கி.மீ கொண்ட ஏ.கே.கால்வாய் மூலம் 304 ஏக்கர், கிருஷ்ணன் கோயில் கால்வாய் மூலம் 200 ஏக்கர், 6கி.மீகொண்ட ஆசாரிபள்ளம் கால்வாய் மூலம் 1400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும் 5கி.மீ உடைய கிழக்கு பிரதான கால்வாய் மூலம் 254 ஏக்கர், 11கி.மீ உடைய அத்திக் கடை கால்வாய் மூலம் 1000 ஏக்கர், 3.4கி.மீ உடைய தெங்கம்புதூர் கால்வாய் மூலம் 750 ஏக்கர், 8 கி.மீ கொண்ட காரவிளை கால்வாய் மூலம் 1000 ஏக்கர்,9 கி.மீ உடைய கிருஷ்ணன்புதூர் கால்வாய் மூலம் 900 ஏக்கர், 28 கி.மீ உடைய நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய் மூலம் 9000 ஏக்கர்,30 கி.மீ கொண்ட பத்மனாபபுரம் புத்தனார் கால்வாய் மூலம் 4500 ஏக்கர், 4 கி.மீ உடைய இரட்டைக் கரை கால்வாய் மூலம் 700 ஏக்கர், 25கி.மீ உடைய திருவட்டார் கால்வாய்மூலம் 800 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
45 கி.மீ கொண்ட பட்டணங்கால் கால்வாய் மூலம் 700 ஏக்கர், 6கி.மீ உடைய புதுக்கடை கிளை கால்வாய் மூலம் 900 ஏக்கர், 6கி.மீ உடைய கருங்கல் கிளைகால்வாய் மூலம் 2000 ஏக்கர், 30 கி.மீ உடைய தொடுவட்டி கிளைகால்வாய் மூலம் 40 ஏக்கர், 30கி.மீ கொண்ட கீழ் குளம் கிளைகால்வாய் மூலம் 1000 ஏக்கர், 7கி.மீ கொண்ட தேவிக்கோடு கிளைகால்வாய் மூலம் 200 ஏக்கர், 13கி.மீ கொண்ட அருவிக்கரை இடதுகரை கால்வாய் மூலம் 130 ஏக்கர், 5கி.மீ கொண்ட அருவிக்கரை வலது கரை கால்வாய் மூலம் 500 ஏக்கர், 18கி.மீ கொண்ட திற்பரப்பு இடதுகரை கால்வாய் மூலம் 130 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
9கி.மீ கொண்ட திற்பரப்பு திற்பரப்பு வலது கரை கால்வாய் மூலம் 400 ஏக்கர், 23கி.மீ கொண்ட கன்னியாகுமரி கிளைகால்வாய் மூலம் 490 ஏக்கர், 12கி.மீ கொண்ட முல்லையாறு கிளை கால்வாய் மூலம் 320 ஏக்கர்,7கி.மீ கொண்ட பாக்கோடு கிளைகால்வாய் மூலம் 300 ஏக்கர், 5கி.மீ கொண்ட மருதன் கோடு கால்வாய் மூலம் 240 ஏக்கர், 5கி.மீ கொண்ட மாங்காடு கால்வாய்மூலம் 240 ஏக்கர், 7கி.மீ கொண்ட மெதுகும்மல் கால்வாய் மூலம் 350 ஏக்கர்,7கி.மீ கொண்ட கொல்லங்கோடு கால்வாய் மூலம் 160 ஏக்கர்,7கி.மீ கொண்ட வெங்கஞ்சி கால்வாய் மூலம் 130 ஏக்கர் என 539 கி.மீ நீளமுள்ள 53 கால்வாய்கள் மூலம் 42,531 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் மாவட்டத்தின் அடிப்படை ஆதாரமாய் உள்ளன.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இக்கால்வாய்கள் விவசாயத்திலும், நிலத்தடி நீரை மேம்படுத்துவதிலும், இயற்கை வளத்தை பாதுகாப்பதிலும் சூழல் தகவமைப்பை உருவாக்குவதிலும், ஈரநிலத்தை ஏற்படுத்துவதிலும் பெரும்பங்காற்றி வந்தபோதும் இவை சரிவர தூர்வாரப்படாத நிலையில் பல கால்வாய்கள் புதர்மண்டி காட்சி அளிக்கின்றன. நீர்வழிதடங்கள் மற்றும் கரைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளால் கால்வாய்கள் தொலைந்து வருகின்றன. பழைய மதகுகள் மற்றும் கால்வாய் சுவர்களில் ஏற்பட்ட உடைப்புகளால் நீர் பெருமளவில் நீர் விரயமாகி கடை வரம்பு விவசாயிகளின் கைக்கு எட்டாத நிலையில் உள்ளது.
ஏற்கனவே விவசாய நிலப்பரப்பு சுருங்கி வரும் நிலையில் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்காத சூழலில் பல ஏக்கர் நிலங்கள் வறண்ட நிலையில் உள்ளன. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கிய குமரி மாவட்டம் சரிவர நீர் ஆதாரங்களை சீரமைத்து, செயல்படுத்தப்படாததால் விவசாயிகள் பாதிப்பினை சந்திக்கும் பரிதாப நிலையில் உள்ளது. எனவே இதனை போக்கிடும் வகையில் அணை திறக்கும் காலத்திற்கும் முன்பாக அனைத்து கிளை கால்வாய்களையும் போர்கால அடிப்படையில் தூர்வாரவும், சேதமடைந்த மதகுகள் மற்றும் கால்வாய்களை சீரமைத்திட வேண்டும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply