சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உயர்மட்டப் பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அகரம் பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் உயர்மட்டப்பாலம் ரூ 15.90 கோடி செலவில் கட்டப்பட்டது. இதனை 2.9.2024 அன்று அப்போதைய அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிலையில் திறப்பு விழா கண்டு 3 மாதங்களில் 2.12.2024 அன்று பாலம் ஆற்றுநீரால் அடித்துச் செல்லப்பட்டது. 250 மீட்டர் நீளம் 12 மீட்டர் அகலம் கொண்ட இப்பாலம் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இடிந்தது எனவும் 54.417 கன அடி நீர் கணக்கில் கொண்டு கட்டப்பட்டது ஆனால் அதைவிட 3 மடங்கு வெள்ளம் சாத்தனூர் அணையில் இருந்து வந்ததால் இச்சம்பவம் நடந்ததாக பொதுப்பணித்துறை விளக்கம் அளித்தது.

பாலம் IRC (Indian Road Congress) விதிமுறைகளின்படி அதிகபட்ச வெள்ள அளவை கடந்த 100 ஆண்டுகளில் பதிவானதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். அவவாறு கணக்கில் எடுத்திருந்தால் 1972ல் பதிவான 2.8 லட்சம் கனஅடி நீர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு பாலம் அமைக்கப்பட்டு இருக்கும். இதன்மூலம் IRC விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெள்ளத்தெளிவாகிறது. இதுபோல் வடிவமைப்பு, அடித்தள தூண்கள், ‘ஃபைல் பவுண்டேஷன், கான்கிரீட் க்யூரிங் போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தாமலும் தரக்குறைபாடு, மேற்பார்வை இன்மை காரணமாக இச்சம்பவம் நடைபெற்று உள்ளதாகவே தெரிகிறது.

ஒரு வெள்ளத்திற்கே தாங்காத வகையில் அமைக்கப்பட்ட பாலம் அதன் தரத்தினையும், அதிகாரிகளின் பரிசோதனையும் கேள்விக்குறி ஆக்கி உள்ளது. மக்களின் வரிப்பணத்தில் ரூ 16 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் வெறுமனே விபத்து என கடந்து போக இயலாது. காரணம் இது மக்களின் உயிர் பாதுகாப்பு சம்பந்தபட்டது. குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்று 18 மாதங்கள் ஆனபின்பும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்விஷயத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன் இதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்துவது அவசர அவசியமானதாகும்.

குறிப்பிட்ட பாலத்தின் ஹைட்ராலிக் வடிவமைப்பு சரியானதா? அடித்தள ஆழம், கான்கிரீட் தரம், இரும்பு சட்டங்கள், தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் நடந்ததா? குறிப்பிட்ட பணிக்கான டெண்டர் மற்றும் பணம் வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்திடும் வகையில் நிபுணர்கள் குழுவினை அரசு ஏற்படுத்திட வேண்டும். இக்குழுவின் அறிக்கையினை வெளிப்படுத்திடுவதுடன் இதில் முறைகேடு ஏற்பட்டது உறுதிபடுத்த ப்பட்டால் அதிகாரிகள் முதல் ஒப்பந்ததாரர் வரை வழக்குபதிவு செய்யப்பட வேண்டும்.

குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெயரை மாநிலம் முழுவதும் கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் கட்டப்பட்ட அனைத்து பாலங்களின் தரங்களையும் அரசு ஆய்வு செய்வதோடு காலநிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு வருங்காலங்களில் பாலங்களின் தர ஆய்வு கடுமைபடுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக மேலும் காலதாமதம் செய்வது மக்களின் நம்பிக்கையினை இழக்கச் செய்வதாகவே அமையும். ஊழலற்ற நிர்வாகத்தை நிலைநாட்ட முயன்று வரும் தமிழக அரசு இவ்விவகாரத்தில் எடுக்கும் நடவடிக்கையின் மூலமே மேலும் இதுபோல் தவறுகள் தொடராமல் தடுப்பதாக அமையும்.

திருவண்ணாமலையில் 3 மாதத்தில் இடிந்த ரூ.15.90 கோடி பாலம் – விசாரணை எப்போது?
வெள்ளத்தில் அடித்துச் சென்ற திருவண்ணாமலை பாலம் – தரக்குறைவு குற்றச்சாட்டு
ரூ.15.90 கோடி பாலம் 3 மாதமே நீடித்தது – நடவடிக்கை கோரும் சமூக பொதுநல இயக்கம்
திருவண்ணாமலை பாலம் இடிவு – கட்டுமான முறைகேடு குறித்து கேள்வி
தென்பெண்ணை ஆற்றில் இடிந்த உயர்மட்டப் பாலம் – முழுமையான விசாரணை அவசியம்
பாலம் இடிந்ததற்கு யார் பொறுப்பு? – சமூக பொதுநல இயக்கம் கேள்வி
திருவண்ணாமலை பாலம் விவகாரம் – தர ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறல் தேவை
வெள்ளத்தைத் தாங்காத புதிய பாலம் – தமிழகத்தில் உள்கட்டமைப்பு பாதுகாப்பு கேள்விக்குறி
ரூ.16 கோடி பாலம் வெறும் 3 மாதங்களில் சேதம் – அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருவண்ணாமலை பாலம் இடிவு – கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட பாலங்களையும் ஆய்வு செய்ய கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *