திருவண்ணாமலையில் 3 மாதத்தில் ஆற்றுநீரில் மூழ்கிப்போன பாலம் – நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி செலவில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் திறந்து வைக்கப்பட்ட மூன்று மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பாலத்தின் வடிவமைப்பு, கட்டுமானத் தரம், மேற்பார்வை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.