சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்திற்கு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விலக்கு – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-

குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உள்ள ரப்பர் தோட்டப் பகுதி

ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் தனியாருக்கு சொந்தமான காடுகளை அழிவில் இருந்து காக்கவும், வனவளங்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசால் 1949 ல் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி தனியார் காடுகளில் மரங்களை வெட்ட வனத்துறையின் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதியில்லாமல் வெட்டினால் அது வனக்குற்றமாக கருதப்பட்டு தண்டனை விதிக்கப்படும். இச்சட்டம் கடந்த 1979ல் குமரி மாவட்டத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

தனியார் காடுகளை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவந்த போதும் குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கள் இதன் கீழ் வகைப்படுத்தப்பட்டது. சுமார் 79000 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமான பகுதி இச்சட்டத்தின் கீழ்வருகிறது. இதனால் குறிப்பிட்ட நிலங்களை விற்கவோ, அடமானம் செய்யவோ, வங்கிகளில் கடன்பெறவோ இயலாத நிலையில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ரப்பர் தோட்டங்களை விரிவுபடுத்துதல், மரங்களை வெட்டுதல் அல்லது புதிய பயிர்கள் பயிரிடுதல் போன்ற செயல்பாடுகளுக்கு அனுமதி பெற வேண்டிய நிலையில் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு பொருளாதார இழப்பிற்கும் உள்ளாகின்றனர்.

காட்டழிப்பை தடுக்கவும், வனஅத்துமீறல்களை ஒடுக்கவும், சுற்றுசூழல் சமநிலையினை, பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும் இச்சட்டம் கொண்டுவந்ததாய் கூறினாலும் குமரி மாவட்டத்தில் இதனால் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவு சுமார் 1684 சதுரகி.மீ உள்ள நிலையில் 1013 சதுரகி.மீ பரப்பளவு வனப்பரப்பாக நீலகிரிக்கு அடுத்ததாக அதிக வனப்பரப்பை கொண்ட மாவட்டமாக குமரி திகழ்வதால் இச்சட்டத்தில் இருந்து மாவட்டத்திற்கு விலக்கு அளிக்கலாம்.

தனியார் காடுகளாக வகைப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் விவசாய பணிக்கோ, விற்பனை செய்யவோ வனக்குழுவில் அனுமதி பெற வேண்டிய நிலையில் இக்குழு கூட்டம் முறையாக நடப்பதில்லை என கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட நிலங்களுக்கு அனுமதி வழங்கப்படும் போதுநில விற்பனை செய்வதற்கு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயம் செய்யப்படுகிறது. நாளாகும் பட்சத்தில் மீண்டும் அனுமதி பெற வேண்டிய நிலையில் விவசாயிகள் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே இத்தகைய பாதிப்புகளை போக்கிடும் வகையில் குமரி மாவட்டத்திற்கு குறிப்பிட்ட சட்டத்தில் இருந்து விலக்கு அளித்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா,தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ்,திருவட்டார் ஒன்றிய செயலாளர் Y. மரியசெல்வன், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல், ஆரல்வாய்மொழி பேரூர் அமைப்பு செயலாளர் S.ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர். இதுகுறித்து இயக்கம் சார்பில் தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பபட்டு உள்ளது.

குமரி மாவட்டத்திற்கு தனியார் காடுகள் பாதுகாப்பு சட்ட விலக்கு தேவை ஏன்?
ரப்பர் தோட்ட விவசாயிகளை பாதிக்கும் வனச்சட்டம்
79,000 ஏக்கர் நிலங்களுக்கு சட்ட சிக்கல்: குமரி விவசாயிகள் கவலை
தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் குமரியில் மாற்றப்படுமா?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வன அனுமதி நடைமுறைகள்
குமரி மாவட்டத்திற்கு தனிச்சட்ட விலக்கு கோரும் சமூக பொதுநல இயக்கம்
ரப்பர் தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
வன பாதுகாப்பும் விவசாயிகளின் உரிமைகளும்: சமநிலை அவசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *