நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள் நகர் செல்லும் சாலை பிரதான சாலையாக திகழ்கிறது. இச்சாலைவழியாகவே திங்கள் நகர், இரணியல், தேங்காய்பட்டணம், கருங்கல், குளச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சென்று வருகின்றன. பரசேரி, பேயன் குழி, கண்டன்விளை, வெள்ளிமலை, நுள்ளி விளை உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை இணைக்கும் இணைப்புச் சாலையாகவும் இவ்வழி திகழ்கிறது. இதனால் தினமும் ஆயிரகணக்கான வாகனங்கள் இச்சாலை மார்க்கமாக தினமும் சென்று வருகின்றன.
இச்சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் இருப்புப்பாதையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஏற்கனவே இருந்த குறுகிய பாலத்தை அகற்றி அதனை விரிவுபடுத்திடும் வகையில் புதிய பால கட்டுமானப்பணிக்கென இங்கிருந்த பாலம் இடிக்கப்பட்டது. இப்பால வேலைகள் நடைபெறுவதை ஒட்டி இச்சாலை வழியாக சென்றுவந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் இங்கு மாற்றுப்பாதை அமைக்கப்படாததால் மாற்றுவழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டு உள்ளது. தோட்டியோடு பகுதியில் இருந்து பரசேரி, நான்குவழிச்சாலை, பேயன் குழி, கண்டன்விளை வழியாக வ வாகனங்கள் திருப்பி விடப்பட்டு உள்ளது
இருப்பினும் அநேக பேருந்துகள் தோட்டியோடு, வில்லுக்குறி, தக்கலை மார்க்கமாக இரணியல் வந்து திங்கள்நகர் செல்கின்றன. இதனால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பேருந்திற்காக அவதிப்படும் நிலை உள்ளது.. இருப்பினும் குறிப்பிட்ட பால வேலைகள் விரைவில் முடிந்துவிடும். தங்கள் கவலைகள் தீரும் என்ற எதிர்பார்ப்புடன் பல்வேறு சிரமங்களையும் தாங்கி வருகின்றனர்.குறிப்பிட்ட பாலப்பணி தொடங்கி 6 மாத காலங்கள் ஆகிறது பணிகள் 8 மாதத்தில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட ரெயில்வே மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் இல்லாமல் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன.
குறிப்பிட்ட இடத்தில் இருந்த பழைய பாலத்தின் தூண்களே இன்னும் அகற்றாத நிலையே உள்ளது. நத்தை வேகத்தில் நகரும் இப்பணிகளால் இச்சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். தங்கள் பகுதிகளுக்கு செல்ல பல கி.மீ சுற்றி பயணிக்க வேண்டிய நிலை உள்ளதால் காலவிரயம், பொருள் இழப்பு,மன உளைச்சல், அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். பள்ளி திறக்கப்பட உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்வி நிலையங்களுக்கு செல்ல இயலாததுடன் சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர். வாகனங்கள் சுற்றி செல்வதால் எரிபொருள் இழப்பு, காலதாமதம், வாகன பகுதிகள் தேய்வு உள்ளிட்டவற்றிற்கும் காரணமாகிறது.
இத்தகைய பாதிப்புகளை பற்றியோ கிராம மக்களின் நிலை குறித்தோ எவரும் கண்டுகொள்ளாத நிலையில் தினமும் பலகி.மீ சுற்றி தங்கள் பகுதிக்கு மக்கள் சென்று வருகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினரும் இன்னலை அநுபவித்து வருகின்றனர். எனவே முடங்கி உள்ள நுள்ளி விளை ரெயில்வே பாலப்பணிகளை விரைந்து செயல்படுத்தி மக்கள் பாதிப்புகள் தொடர்வதை தடுத்திடும்படி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், துணை தலைவர் பேரா.C.மோகன், துணை செயலாளர் R.சாராபாய், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் E சுரேஷ், மகளிர் அணிச் செயலாளர் பொன்.மாரியம்மாள், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் D.தேவதாஸ், தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A. கணபதி மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply