சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சித்ரவதைக்கு எதிரான தடுப்பு சட்டம் நிறைவேற்றிட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

இந்தியாவில் சித்ரவதை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விழிப்புணர்வு

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

இந்தியாவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சிறைக்காவலில் இருப்போருக்கு சித்ரவதை மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் ஆய்வுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளது. இது அரசியல் சாசனத்திற்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானப் போக்கையே காட்டுகிறது. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 21 (உயிர்வாழும் உரிமை, தனிப்பட்ட சுதந்திரம்) சித்ரவதையினை தடைசெய்கிறது. ஆனால் சித்ரவதை தடுப்பு சட்டம் இதுவரை நிறைவேற்றப்படாததால் இதுதொடர்பான குற்றங்கள் துன்புறுத்தல், கொலை முயற்சி பிரிவுகளிலேயே எடுத்து கொள்ளப்படுகிறது.

இந்தியாவில் 2023 ல் சுமார் 2400/ 2024ல் 2739 காவல் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. இவை போலீஸ் காவலில், சிறை காவலில் அரங்கேறி உள்ளன. 2025 (8 மாதங்களில்) போலீஸ் காவலில் 113, மரணங்கள்/ சிறை காவலில் 1535,என்கவுண்டர் கொலைகள் 132 நிகழ்ந்து உள்ளன. இதில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி உள்ளது. இங்கு சட்டவிரோத கொலைகள், சித்ரவதைகள் அதிகரித்து உள்ளதை சுட்டிக்காட்டி ஐ.நா எச்சரித்து உள்ளது.

குறிப்பாக இத்தகைய சம்பவங்களில் முஸ்லீம்கள், தலித்துகள், ஏழைகள், குழந்தைகள், ஆதிவாசிகள் போன்ற தரப்பினரே அதிகமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. காவல்துறை/ அரசு அதிகாரிகளால் நிகழும் உடல், பாலியல், மன ரீதியாக சித்ரவதைகள் செய்யப்பட்ட போதும் சம்பந்தபட்டவர்கள் தண்டனையின்றி தப்பித்து விடுகின்றனர். இதனால் இத்தகைய சம்பவங்கள் தொடர்கதையாக நிகழ்கிறது. இந்தியா 1997ல் ஐ.நா சபையில் சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கையில் (UN Convention against Torture UNCAT) கையெழுத்திட்டது. ஆனால் இதுவரை ஏற்பு செய்யவில்லை. இதனால் சர்வதேச அளவில் கண்காணிப்பு, புகார் அளித்தல் சாத்தியம் இல்லாமல் உள்ளது.

Prevention of Custodial Torture Bill மசோதா கடந்த 2010ல் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2017, 2022, 2023, 2024 ஆண்டுகளில் மாநிலங்களில் கொண்டுவந்த போதும் அது நிறைவேறாததால் சட்டமாகாத நிலையில் உள்ளது.2025-26 அறிக்கையின் படி Global Torture Index 2025 Un Experts இந்தியா H|GH RISK நாடாக வகைப்படுத்தி உள்ளது. இத்தகைய நிலையினை போக்கிட வலுவான, தெளிவான சித்ரவதைக்கு எதிரான தடுப்பு சட்டம் இயற்றப்படுவதே தீர்வாக அமையும்.

இதன் மூலம் புகார் அளிப்பவர்கள், சாட்சிகள் பாதுகாக்கப் படுவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு, மறுவாழ்வு உறுதி செய்யப்படும். விசாரணைகள் ஒழுங்குபடுத்த ப்படுவதோடு காவல் மரணங்களுக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் இது போன்ற மீறல்கள் தவிர்க்கப்படும். சித்ரவதை என்பது தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துதல் என்பதால் ஒவ்வொரு குடிமக்களின் உரிமைகளும், மாண்புகளும், சுதந்திரமும் பாதுகாக்கப்பட, ஜனநாயகத்தில் நாம் வாழ்வதை உறுதிபடுத்திட சித்ரவதைக்கு எதிரான சட்டம் இயற்றுதல் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *