சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளில் நெல் சேதமாகி ரூ 840 கோடி இழப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

மழையில் சேதமடைந்த நெல் மூட்டைகள் காரணமாக விவசாயிகள் இழப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நெல் கொள்முதல் மையமான கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் நெல்மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தது. 60 ஆயிரம் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நிலையில் மூடி வைக்கப்பட்ட தார்பாய் காற்றில் பறந்தது. இதனால் மழையில் 5 ஆயிரம் முட்டைகளுக்கு மேலாக நனைந்ததோடு இப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகும் செய்தி இதயத்தை இரணப்படுத்துவதாக உள்ளது.

விவசாயிகள் நெல்பயிரை காத்து விளைவித்து பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு அறுவடை செய்து அதன் பலனை அனுபவிக்கும் நிலையில் இவ்வாறு நெல்மணிகள் மழையில் நனைந்து சேதம் அடைவது தொடர்கதையாகவே உள்ளது. போதிய சேமிப்பு கிடங்குகள் இல்லாத ஒரே காரணத்தால் அவர்களது உழைப்பும், உணவு தானியங்களும் நாசமாவதோடு பொருளாதார இழப்பினையும் எதிர்கொள்ளும் நிலையில் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக இருப்பதாக சொல்லி கொள்வதால் அவர்கள் துன்பங்கள் நமது முகங்களுக்கு தெரிவதில்லை.

தமிழ்நாட்டில் தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 367 கிடங்குகள் உள்ளன. தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் சார்பில் 60 கிடங்குகள் உள்ளன. அறுவடை காலங்களில் நிரந்தர மூடிய கிடங்குகள் போதாத நிலையில் திறந்தவெளிகளில் நெல் மூடைகள் சேமிக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்படும் மூடைகள் எவ்வித பாதுகாப்பும் இல்லாததால் மழையில் நனைந்து முளைக்கும் நிலையால் விவசாயிகள் புலம்புவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் கையறுநிலையில் உள்ளனர்.

கடந்த 2019-24 காலத்தில் மட்டும் இவ்வாறு 3.72 லட்சம் மெ.டன் நெல் தானியங்கள் சேதம் அடைந்து உள்ளது. இதனால் ரூ 840 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இத்தகைய பாதிப்புகள் காலநிலை சவால் என்றும் இயற்கை இடர்பாடு எனவும் கடந்து செல்ல இயலாது. கடந்த ஆட்சிக்காலத்தில் மகளிர் உரிமைத்தொகைக்கென ரூ 25 ஆயிரம் கோடி செலவு செய்து உள்ளனர். மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ 15 ஆயிரம் கோடி செலவு செய்துள்ள நிலையில் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு என ஒதுக்கப்பட்ட பட்ட தொகை ரூ 300 கோடி மட்டுமே. இதன்மூலம் விவசாயிகளின் வேதனை தீர்க்க ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அக்கறையினை உணரலாம்.

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை பகுதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறுவை/சம்பா உள்ளிட்ட உச்ச அறுவடை காலங்களில் போதுமான நவீன சேமிப்பு கிடங்குகள் இல்லாத நிலையில் மழை சேதமும், முளைப்பும் ஏற்படுவதை தடுத்திடும் வகையில் போதிய கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் தொடரும் இத்தகைய பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கவும், உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்வது அவசர அவசியமானதாகும்.

நெல் சேமிப்பு கிடங்குகள் பற்றாக்குறையால் விவசாயிகள் பாதிப்பு
மழையில் நெல் சேதம்: ரூ.840 கோடி இழப்பு என குற்றச்சாட்டு
திறந்தவெளி சேமிப்பால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு
டெல்டா மாவட்டங்களில் நெல் சேதம் அதிகரிப்பு
சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் உணவு தானியம் வீணாகிறது
விவசாய உற்பத்தி பாதுகாப்பில் அரசு தவறு என குற்றச்சாட்டு
நெல் கொள்முதல் மையங்களில் அடிப்படை வசதி இல்லாமை
விவசாயிகள் உழைப்பு வீணாகும் நிலை தொடர்கிறது
ரூ.840 கோடி நெல் சேதம்: சமூக பொதுநல இயக்கம் எச்சரிக்கை
உணவு பாதுகாப்புக்கு ஆபத்து: நெல் சேமிப்பு பிரச்சினை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *