சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளில் நெல் சேதமாகி ரூ 840 கோடி இழப்பு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
தமிழ்நாட்டில் போதிய நெல் சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் வைக்கப்படும் நெல் மழையில் நனைந்து சேதமடைந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக பொதுநல இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பை காக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.