சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

5 வருடகாலமாக போராடிவரும் காவலர்.கோதண்டபாணிக்கு நீதி கிடைப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி-

மருத்துவ அலட்சியத்திற்கு எதிராக நீதி கேட்டு போராடும் காவலர் கோதண்டபாணி

தலைமைக் காவலராக பணிபுரியும் கோதண்டபாணி என்பவரது மகள் பிரதிக்ஷாவுக்கு சிறுநீரக பிரச்னை தொடர்பாக கடந்த 2021ல் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். டாக்டர்களின் அலட்சியப் போக்கினாலும், தவறான சிகிச்சை காரணமாகவும் கால் பாதம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என கேட்டு அவர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

2023ல் தலைமைச்செயலகம் முன் மகளுடன் போராட்டம், டி.ஜி.பி அலுவலகம் முன்பாக போராட்டம், கடந்த ஜனவரியில் கோட்டை முன்பாக போராட்டம் என பல்வேறு பகுதிகளிலும் போராடியதுடன் ஓட்டேரி காவல்நிலையத்திலும் இதுதொடர்பாக புகார் அளித்து இருந்தார். இப்பிரச்னை தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர்களின் அலட்சியம் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மனம் உடைந்து போன காவலர் கோதண்டபாணி தனது மகளுடன் சீருடையில் வந்து சென்னை தலைமை செயலக வாசலில் வைத்து இன்று (9ந்தேதி) தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தி.மு.க கட்சி கொடியை எரித்து போராட்டம் நடத்த முயன்றார்.உடனே அங்கிருந்த காவலர்கள் நெருப்பை அனைத்தார். இதன் பின் அவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கடந்த ஆட்சிகாலத்தின் போது எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக வந்த ஏராளமான குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்து மருத்துவமனை நடவடிக்கை கேள்விக்குறியானது.

ஆட்சி மாற்றம் நடந்த பின்பும் இம்மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியபோக்கும்/ சிகிச்சை குறைபாடும் எந்தவிதத்திலும் மாறவில்லை என்பதை காவலர் கோதண்டபாணி மகளின் நிலையே வெளிப்படுத்தி உள்ளது. மருத்துவர் அல்லது மருத்துவமனை நியாயமான கவனம் செலுத்தாமல் நோயாளிக்கு உடல்/உயிர் பாதிப்பு ஏற்படுத்தும் செயலில் ஈடுபடுவது சிவில் (இழப்பீடு) கிரிமினல் (தண்டனை) தொழில்ரீதியான (உரிமம் ரத்து) நடவடிக்கைக்கு உட்பட்டதாகும்.

அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் குறைபாடுகள் மருத்துவ கல்வி இயக்குனரகம் மூலம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் காவலர் கோதண்டபாணி விஷயத்தில் ஏன் உரிய விசாரணை நடத்தப்படவில்லை? உரியவர்கள் மீது குற்ற நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை? என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில்கள் இல்லாததால் அவர் வீதியில் வந்து போராடும் நிலைக்கு ஆளாகி உள்ளார். இத்தகைய கேள்விகள் அவரது கேள்வி மட்டுமல்ல அனைவரது கேள்வியுமாகும். குற்றவாளிகளை பாதுகாப்பதை விட்டு பாதிக்கப்பட்டவருக்கு உரியநீதி வழங்க படவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகும்.

மருத்துவ அலட்சியம் தொடர்பான செய்திகள்
5 வருடங்களாக நீதி தேடும் காவலர் கோதண்டபாணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *