சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகம் திருமலை சமுத்திரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 31.37 ஏக்கர் நிலத்தை கடந்த 1984ல் ஆக்கிரமிப்பு செய்து அதில் விடுதி, வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட 28 கட்டிடங்களை கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நிலம் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க அரசு திட்டமிட்ட பகுதியாகும். கடந்த 40 ஆண்டு காலமாக இப்பிரச்னை நீடித்து நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின் 2018ல் அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. அப்போது பல்கலைக்கழக நிர்வாகம் ஆக்ரமிப்பு இடத்திற்கு பதில் மாற்று இடம் தருவதாக கூறியது. அதனை தமிழக அரசு நிராகரித்தது.
இந்நிலையில் குறிப்பிட்ட ஆக்ரமிப்பினை அகற்றி அரசு நிலத்தை மீட்பேன் என ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து 2021ல் ஜெயந்தி ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினை அமைத்தார். இருப்பினும் இவ்விவகாரம் முடிவுக்கு வராமல் நீடித்த நிலையில் 9 ஜனவரி 2026 ல் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட பல்கலைகழகம் ஆக்ரமித்த 31.37 ஏக்கர் நிலத்தை 4 வார காலத்திற்குள் அ அரசிடம் ஒப்படைத்திட உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பல்கலைகழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததின் பேரில் 15ஜனவரி 2026 அன்று உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இதன்மூலம் ஆக்கிமிப்பு அகற்றம் என்பது நிறைவேறாமல் இப்பிரச்னை சிந்துபாத் கதை போலவே நீடிக்கிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யாதது, பல்கலைகழக தரப்பினருக்கு எதிரான வாதங்களை நீதிமன்றத்தில் சரிவர முன்வைக்காதது ஏன்?? என்பதற்கான கேள்விகளுக்கு இதுவரை உரிய பதில்கள் இல்லை.
ஆக்ரமிப்புகள் என்பது பாரபட்சமின்றி அகற்றப்பட வேண்டியது அன்றி வேறில்லை. ஆனால் சட்டம் என்பது இல்லாதவர்களுக்கு மட்டும் தானோ?என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகி உள்ளது. அரசு நிலங்களை வசதி படைத்தவர்கள் ஆக்ரமித்தால் அதனை ஆக்ரமிப்பு என சொல்ல இயலாதோ? எத்தனையோ குடியிருப்பு வாசிகளை அப்புறபடுத்தும் நீதிமன்றங்கள் பணமுதலைகள் ஆக்ரமிப்புகளுக்கு மட்டும் குடைபிடிப்பது நியாயத்தின் மீதான நம்பகதன்மையை சீர்குலைப்பதாகவே உள்ளது.
இவ்விஷயத்தில் தமிழக அரசின் அலட்சிய போக்கு வரும் காலங்களில் இது போன்ற தவறுகளுக்கு ஊக்கப்படுத்துவது போலவே உள்ளது. தமிழகத்தில் அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்ரமிப்பாளர்கள் பிடியில் தத்தளித்து வரும் சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோர் கொலை செய்யப்படும் நிலை தொடர்கதையாகி வருகிறது. எனவே ஆக்ரமிப்பிலும் அரசியல் பார்க்காது பாரபட்சமின்றி, உயர்வு தாழ்வு பாராது உறுதியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகும்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply