ஸ்ரீபெரும்புதூர் சட்டவிரோத கல்குவாரிக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்திட வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்-
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.