காற்று மாசால் நஞ்சாகும் மூச்சுக்காற்று தடுக்க நடவடிக்கை எடுப்பது எப்போது? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மனிதர்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் ஆயுட்காலம் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு (EPI) மற்றும் உலக காற்றுத் தர அறிக்கைகள் இந்தியா மிகவும் மாசுபட்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வன பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு, நீர்நிலைகள் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.