சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
தமிழகத்தின் “லெமன் சிட்டி” என அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் மிகப்பெரிய எலுமிச்சை சந்தை உள்ளது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இச்சந்தையில் தினசரி சுமார் 250 டன் எலுமிச்சை வரை ஏலம் விடப்படுகிறது.இங்கு 2000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கின்றனர். 2025ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ள நிலையில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் இப்பகுதி விவசாயிகள் பலன் பெற இயலாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட எலுமிச்சை சந்தை அருகே பேருந்து நிறுத்தம் இல்லை. இதனால் மூட்டைக்கு ரூ 500 வரை கூடுதல் செலவாகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு எலுமிச்சை பழங்களை அனுப்பிட நேரடி ரயில் வசதி இல்லை. இங்கிருந்து 90கி.மீ கடந்து திருநெல்வேலி கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. விலை கடுமையான ஏற்ற இறக்கம் ஏற்படுவதால் அதனால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க குளிர்பதன கிடங்கு மற்றும் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை இதுவரை அமைக்கப்படவில்லை.
இதனால் அதிக சிட்ரிக் அமிலம், மெல்லிய தோல், அதிக சாறு, உயர் வைட்டமின் C சத்து நிரம்பியதாக இருந்த போதும், பண்ருட்டி பலாப்பழம், விருப்பாச்சி வாழைப்பழம், சிறுமலை மலைவாழை, கன்னியாகுமரி மட்டி வாழை, ஈத்தாமொழி தேங்காய் இவைகளை போல் இப்பகுதி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட போதும் அதனால் முழு பயனையும் பெற இயலாமல் புளியங்குடி விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
விலை வீழ்ச்சியினையும், பழங்கள் சேதம் அடைவதையும் தவிர்க்க கிரேடிங், சார்ட்டிங், பேக்கிங் யூனிட் மற்றும் குளிர்பதன கிடங்கு இங்கு அமைத்தாக வேண்டும். மேலும் எலுமிச்சை ஜூஸ், பிக்கில், எண்ணை, பவுடர், கேண்டி உள்ளிட்ட மதிப்பு கூட்டும் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் இங்கு தொடங்கப்பட வேண்டும். இதன்மூலம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து விவசாயிகள் தப்ப முடிவதுடன் கூடுதல் வேலைவாய்ப்புகளும், வருமானம் பெருகவும் வழி ஏற்படும்.
தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டுமே எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் Agriculltural and processed Food Products Export Development Authority (APEDA) உதவியுடன் சவுதி,மாலத்தீவு, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி சந்தையினை விரிவுபடுத்தலாம். இடைத்தரகர்கள் மூலம் வருமான இழப்பை தவிர்க்க ஆன்லைன் ஏலம்/e.NAM தளங்கள் மூலம் நேரடி விற்பனை மேற்கொள்ளலாம். சர்வதேச சந்தையில் புளியங்குடி எலுமிச்சை பழம் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் வகையிலும், விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும் வகையிலும் உரிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான உதவிகளை அரசு வழங்கிட வேண்டியது மிகவும் அவசியமானது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply