தேதி: 11 ஆகஸ்ட் 2025, ஞாயிறு
தோவாளை ஒன்றிய சமூக பொதுநல இயக்க செயற்குழு கூட்டம் தெள்ளாந்தி பகுதியில் ஒன்றியதலைவர் M. மரிய அற்புதம் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் Y.ராகுல் முன்னிலை வகித்தார். இயக்க ரத்ததான பிரிவு மாவட்ட செயலாளர் J. ஆன்றனி மிக்கேல் மாவட்ட பார்வையாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் துணை தலைவர் C.மணிகண்டன், துணை செயலாளர் E.சுரேஷ், இளைஞர் அணிசெயலாளர் A.மணிகண்டன், கலை இலக்கிய அணி செயலாளர் ஜனார்தனன், நலிந்தோர் மேம்பாட்டு அணி செயலாளர் P.மூர்த்தி, நெல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வாழையத்து வயல்-புதுநகர் ஆக்கிரமிப்பு அகற்றம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.












Leave a Reply