தஞ்சாவூரில் அழியும் வரலாறாய் உருமாறிய வடவாறு – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.
தஞ்சாவூர் நகரின் வரலாறு, ஆன்மீகம், குடிநீர் மற்றும் விவசாயத்துடன் இணைந்துள்ள வடவாறு ஆறு, கழிவுநீர் கலப்பு மற்றும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆற்றை மீட்க கழிவுநீர் கலப்பை தடுத்து, சீரமைப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது.