சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
இந்தியாவில் ஊழல் மற்றும் லஞ்சத்தை தடுப்பதற்கான ஊழல் தடுப்பு சட்டம் 1988 முதல் நமது நாட்டில் அமலுக்கு வந்தது. இதில் 2018 ல் திருத்தம் செய்யப்பட்டு விதி 17 A சேர்க்கப்பட்டது. இத்திருத்தத்தின் மூலம் அரசு ஊழியர்களை ஊழல் குற்றசாட்டுகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் இரும்புத்திரையாகவே இச்சட்ட திருத்தம் அமைந்து உள்ளது. ஓர் அரசு ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் மீது முன் அனுமதி இல்லாமல் காவல்துறையினர் விசாரணை உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க இயலாது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் எனில் மத்திய அரசு அல்லது அதிகாரபூர்வ அதிகாரியிடமோ, மாநில அரசு ஊழியர் எனில் மாநில அரசு, மற்றவர்களுக்கு தகுந்த அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும். நேர்மையான அதிகாரிகளை தேவையற்ற வழக்குகளில் இருந்து பாதுகாக்கவும், ஊழலை கட்டுபடுத்தவும் இச்சட்டதிருத்தம் கொண்டு வந்ததாக கூறப்பட்டாலும் இது ஊழல் அதிகாரிகளை பாதுகாக்கும் கேடயமாகவே உள்ளது.
இச்சட்டதிருத்தம் தொடர்பாக விவிசாரணை மேற்கொண்ட நீதிபதி B.V.நாகரத்னா சட்டதிருத்த பிரிவு 17 A அரசியல் அமைப்புக்கு எதிரானது. இது ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது. விசாரணையை முன்கூட்டியே தடுக்கிறது. ஆதலால் இப்பிரிவு ரத்து செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி K.V.விஸ்வநாதன் குறிப்பிட்ட பிரிவு செல்லுபடியாகும் எனவும் ஆனால் மாற்றம் தேவை. அரசுக்கு பதிலாக லோக் ஆயுக்தா அல்லது லோக்பால் போன்ற சுயாதீன அமைப்புகள் விசாரணை செய்து அனுமதி அளிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்து இருந்தார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகள் அளித்த நிலையில் 13.1.26 அன்று குறிப்பிட்ட வழக்கு பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன் முடிவு இனி தலைமை நீதிபதி கையில்தான் உள்ளது. இதனால் பிரிவு 17 A தற்காலிக அமலில் தான் உள்ளது. ஊழல் அதிகாரிகள் மீதான விசாரணையை தொடங்குவதற்கே அரசு அனுமதி தேவை என்னும் நிலையில் குறிப்பிட்ட நபர்கள் மீது உரிய அனுமதியின்றி விசாரணை நடத்த முடியாது என்பதால் காவல்துறை மற்றும் CPI உள்ளிட்டவற்றின் சுதந்திரம் பறிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஊழல்வாதிகள் இதன் மூலம் தங்களை பாதுகாத்து கொள்வதற்கே இச்சட்ட திருத்தம் இவர்களுக்கு சுதந்திரத்தை அளித்து உள்ளது. ஊழல், முறைகேடுகள் தடுக்கப்படவும் அதனை முற்றிலுமாய் ஒழிக்கப்படுவதற்கும் மாறாக அவர்களை பாதுகாக்கவே இது வழிவகுக்கிறது. எனவே ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் புறம்பான இத்தகைய சட்டதிருத்தம் ரத்து செய்தாக வேண்டும்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply