நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பேரூராட்சி சந்தையில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் கட்டுமானப்பணிக்கென தற்காலிக கடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்பின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே அங்கு கடை நடத்தி வந்த வியாபாரிகளுக்கு கடை வழங்கிட பேரூராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. மேலும் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் தொகையினை இவர்களிடம் வாடகையாக கேட்பதால் வியாபாரிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளை சமூக பொதுநல இயக்கம் சார்பில் சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்கப்பட்டது. இயக்க நெல்லை மாவட்ட தலைவர் P.சுப்பிரமணியன் தலைமையில் பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் முன்னிலையில் இம்மக்கள் சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வியாபாரிகள் பிரச்னை தொடர்பாக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரியை சந்தித்து பிரச்னை தொடர்பாக வலியுறுத்தி தீர்வு காண்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மீண்டும் ஆலோசித்து முடிவு எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply