சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

தக்கலையில் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சாலையை கடந்து செல்ல தவிப்பு.

thuckalay-disabled-road-crossing-issue

தமிழ்நாட்டில் மாநகராட்சி, பஞ்சாயத்துக்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி வழங்கப்படும் எனவும் இதுதொடர்பாக சட்டதிருத்தம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் எனவும் தமிழக முதல் அமைச்சர் தெரிவித்து உள்ளார். இத்தகைய அறிவிப்பு வரவேற்கதக்கதே. ஆனால் இன்னும் பல அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான பாதை அமைக்கப்படாமல் உள்ளதே இதனை ஏன் அரசு இன்னும் கண்டு கொள்ளவில்லை.

தங்கள் வாழ்வாதாரத்திற்காக மட்டுமல்ல வாழ்வதற்கே போராடி வரும் நிலையில் பல்வேறு நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதன் ஓர் அம்சமாக இவர்களது நலனையோ, ஏற்பாடுகளையோ கவனத்தில் கொள்ளாததால் தங்கள் கோரிக்கைகளுக்காக போராடும் இவர்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

குமரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தக்கலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்ல நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையினை கடந்தே செல்ல வேண்டும். இச்சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்புடன் உள்ள நிலையில் இச்சாலையினை கடந்து செல்ல மாற்றுத்திறனாளிகள் உயிரை கையில் ஏந்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை என்பதால் வேகத்தடை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.சாலையினை கடந்து செல்ல சுரங்கப்பாதை வசதிகளும் இல்லை. ஆகவே வெளிநோயாளிகள் இம்மருத்துவமனைக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு என செல்லும் குறிப்பிட்ட நேரங்களில் இப்பகுதியில் போக்குவரத்து போலீசாரை நிறுத்தி நோயாளிகள் சாலையினை கடந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் R.சேர்மா கணேஷ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை தலைவர்கள் S.அருள்ராஜ், S.ஜேசுராஜ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சமூக பொதுநல இயக்கம்,

தலைமைச் செயலகம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *