சமூக பொதுநல இயக்கம் கேள்வி –
குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் ஆகிய 4 போலீஸ் சப் டிவிஷன்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் மிகப்பெரிய சப் டிவிஷன் ஆக விளங்கிய தக்கலை டிவிஷனை பிரித்து மார்த்தாண்டத்தை மையமாக கொண்டு புதிய சப்டிவிஷன் உருவாக்கப்பட்டு உள்ளது.
தக்கலை சப்.டிவிஷன் பிரிக்கப்பட்டு கொல்லங்கோடு, நித்திரவிளை, களியக்காவிளை, மார்த்தாண்டம், அருமனை, ஆறுகாணி, கடையாலுமூடு, பளுகல் உள்ளிட்ட 10 காவல்நிலையங்கள் இணைக்கப்பட்டு புதிதாக மார்த்தாண்டம் சப்டிவிஷன் உருவாக்கப்பட்டது. இங்கு டி.எஸ்.பி தலைமையில் தலைமை காவலர் உள்ளிட்ட 6 பேர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல்,மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் சப். டிவிஷனை மையமாக கொண்டு மகளிர் காவல்நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தக்கலை சப். டிவிஷன் ஒரே பகுதியாக இருந்த போது மார்த்தாண்டத்தில் மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது சப்டிவிஷன் பிரிக்கப்பட்ட பின் புதிதாக மகளிர் காவல் நிலையம் தொடங்கப்படவில்லை.
இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கவும், அதனை தடுக்கவும் இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தை அந்த சப்.டிவிஷனுக்கு ஒதுக்கும் சூழலில் தக்கலையில் மகளிர் காவல்நிலையத்தை இந்த சப். டிவிஷன் மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கும் படி சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, பொருளாளர் S. மைக்கேல்ராஜ், அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply