குமரி மாவட்டம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு பேயன் குழி கிராமத்தில் சமூக பொதுநல இயக்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நடந்தது. தக்கலை ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A.கணபதி தலைமையில் நடந்த இந்நிகழ்வில் செண்பகராமன்புதூர் பகுதி செயலாளர் R.சிவகுமார் முன்னிலை வகித்தார்.
பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் A கோபாலகிருஷ்ணன், A.குமார், அந்தோணி அருள், A.ராமசந்திரன், ராஜம்மாள், மகாலெட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply