சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் M.கேதரின் பேபி தலைமையில் நடந்தது. ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் M.S.அமலன், தலைமை நிலையச் செயலாளர் S.ராஜ், மாநில மீனவர் அணிச் செயலாளர் M.மோகன்குமார், தென்மண்டலச் செயலாளர் ஞாலம் Tஜெகதீஷ் முன்னிலை வகித்தனர். செயலாளர் P.சந்திரா செயல் அறிக்கை சமர்ப்பித்தார். பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் மருத்துவ அணிச் செயலாளர் Dr.A பெர்லின்ங்டன், சுற்றுசூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் CV முருகன், மகளிர் அணிசெயலாளர் R. சாராபாய், சமூக சீர்திருத்த அணிச் செயலாளர் பொன்.மாரியம்மாள் உள்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 2026 ம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் விவாதிக்கபட்டது. கல் மண்டபம் பாதுகாப்பதற்கான நடவடிக்கை, பழையாறு கழிவுநீர் கலப்பாமல் இருக்க நடவடிக்கை, ஏ.வி.எம் கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சி, ஆசாரிபள்ளத்தில் புற்றுநோய் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை மேற்கொள்வதற்கான முயற்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள மலைவளம் காப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.
முக்கிய வேலை திட்டமாக கொள்ளைபோகும் குமரி மாவட்ட கனிம வளங்களை காப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் 2026 ம் ஆண்டின் பணிவாசகமாக
” கனிம வளம் காப்போம்…
கன்னியா குமரியை மீட்போம்.”
எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply