சமூக பொதுநல இயக்கத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
தோவாளை ஒன்றியம் –
தோவாளை ஒன்றிய அளவிலான செயற்குழு கூட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி மார்த்தால் பகுதியில் ஒன்றிய தலைவர் M. மரிய அற்புதம் தலைமையில் நடந்தது. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் E.சுரேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளராக குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி கலந்துகொண்டு பேசினார். ஒன்றிய செயலாளர் Y.ராகுல் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளர் M.ஜனார்தனன், வினிஷ், ஜமால், ஸ்டாலின், பீர்முகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

திருவட்டார் ஒன்றியம்.
திருவட்டார் ஒன்றியக் கூட்டம் திற்பரப்பு பகுதியில் ஒன்றிய தலைவர் K.ரெங்கசாமி தலைமையில் நடந்தது. மனநலப் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் S. அருள்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வையாளராக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் Adv.S.A. திலகர் கலந்து கொண்டார்.
ஒன்றிய செயலாளர் Y.மரியசெல்வன் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் ஒன்றிய துணை தலைவர் A.அகஸ்டின் ராஜ், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் S. மேரி சுலோசனா, C. கிறிஸ்டி விமலாபாய்,D.ஷாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அருமனை முதல் திருவரம்பு வழியாக குலசேகரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக குறுகியதால் உள்ளதால் மக்கள் நலன்கருதி அதனை சீரமைத்திட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தக்கலை ஒன்றியம்.
தக்கலை ஒன்றியக் கூட்டம் நுள்ளி விளை ஊராட்சி கண்டன்விளை பகுதியில் ஒன்றிய செயலாளர் L. தேன் ரோஜா தலைமையில் நடந்தது..மாவட்ட பார்வையாளராக மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ் கலந்து கொண்டார். மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு அணி ஒன்றிய செயலாளர் Rஜாஸ் பின் பெமி, விவசாய அணி செயலாளர் A.கணபதி உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply