சமூக பொதுநல இயக்கம் புகார் –
இயற்கை அன்னை புன்னகைக்கும் எழில் சூழ்ந்த தெள்ளாந்தி பூதப்பாண்டி அருகே உள்ள அழகிய கிராமம். இப்பகுதிக்கு சீதப்பால், தெரிசனங்கோப்பு, கடுக்கரை, குறத்தியறை மார்க்கமாக செல்ல சாலை வசதி உள்ளது. இருப்பினும் தெரிசனங்கோப்பு பகுதியில் இருந்து இங்கு வரும் சாலையே பிரதான பாதையாக திகழ்கிறது. இவ்வழியாக தடம் எண் 4T கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது.
இப்பேருந்து குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இங்கு வந்து செல்லும் நிலையில் ஏனைய நேரங்களில் இக்கிராம மக்கள் பூதப்பாண்டி, நாகர்கோவில், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தெரிசனங்கோப்பு பகுதிக்கே நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுமார் 2கி.மீ தூரம் இப்பகுதி மக்கள் தினமும் நடையாய், நடந்தே வேலை, பள்ளி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை தேவைக்கு கூட சென்று வருகின்றனர்.
இதனால் தெள்ளாந்தி,முடங்கன் விளை, கேசவநேரி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் பெண்கள், முதியோர், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர் இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு காலங்களில் இச்சாலையில் பயணிப்போர் மிகுந்த பயத்துடனே பயணிக்கும் பரிதாப நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
எனவே இவர்களது பாதிப்புகளை நிவர்த்தி செய்திடும் வகையில் தென்ளாந்தி பகுதிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். திட்டு விளையில் இருந்து கடுக்கரை மார்க்கமாக செல்லும் காட்டுபுதூர் பேருந்துகளை தெரிசனங்கோப்பு பகுதியில் இருந்து தெள்ளாந்தி, கேசவநேரி வழியாக குறத்தியறை வந்து செல்லும் வகையில் இயக்கலாம். இதன்மூலம் இப்பகுதி மக்களின் போக்குவரத்து தேவை பூர்த்தி செய்வதாக அமையும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் அமீது,குமரி கோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா,த தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் E.சுரேஷ் தோவாளை ஒன்றிய தலைவர் M. மரிய அற்புதம், துணை தலைவர் C.மணிகண்டன்,செயலாளர் Y.ராகுல்,த இளைஞர் அணி செயலாளர் A..மணிகண்டன், தெள்ளாந்தி ஊராட்சி செயலாளர் E.செல்வபிரகாசம் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply