சமூக பொதுநல இயக்கம் புகார் –
பயத்துடன் பயணித்தால் பயணம் ரசனை இல்லை. ஆபத்துடன் காத்திருந்தால் உயிர் வாழும் நிமிடங்கள் உங்களுக்கானது அல்ல – இது எதற்கு பொறுந்துமோ இல்லையோ பைங்குளம் மக்களுக்கு பொறுந்தும். தலைக்கு மேல் தொங்கும் கத்தி போல் ஒவ்வொரு நாளும் ஆபத்தோடு வாழ்ந்து வரும் இவர்கள் பற்றி உங்களுக்கு தெரியவேண்டுமா?
குமரி மாவட்டம் முஞ்சிறை ஒன்றியம் பைங்குளம் ஊராட்சி பகுதியில் பிரதான சந்திப்பில் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ளது பயணிகள் நிழலகம். இப்பகுதியில் இருந்தே மார்த்தாண்டம், இணையம், தேவ்காப்பட்டணம், கருங்கல்,நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள பயணிகள் நிழலகம் பழுதாகி தனது அந்திம காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றது.
இடிந்து விழும் நிலையில் இந்த நிழலகம் மழைகாலங்களில் தன்னிடம் ஒதுங்கும் பயணிகள் நிலைக்காய் கண்ணீர் வடிக்கிறது. மாணவர்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள்/பெண்கள், பக்தர்கள், குடிமகன்கள் என அனைத்து தரப்பினரும் சங்கமிக்கும் சமத்துவபுரமாய் காட்சி அளிக்கும் குறிப்பிட்ட நிழலகம் கைவிடப்பட்ட குழந்தை போல் ஆதரவு அளிப்பவர்களை எதிர்பார்த்து இருக்கின்றது.
ஆபத்து பயணிகளை நெருங்கும் முன் அவர்களை காப்பது உரியவர்களின் கடமை.தற்போது செடி,மரங்களுக்கு எல்லாம் காப்பகமாக விளங்கும் இந்த நிழலகத்தை காப்பது முக்கியம். இப்பகுதி மக்கள் திகிலுடன் உயிர் பயத்துடன் காத்திருக்கும் நிலையினை போக்கிடும் வகையில் இங்கு புதிதாக நிழலகம் அமைத்து பயணிகள் நலன் காத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் M.கேதரின் பேபி, செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் பேரா. C மோகன், அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் R.சாம் எட்வர்ட் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply