சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
தோட்டியோடு முதல் திங்கள்நகர் வரையிலான சாலையில் நுள்ளி விளை பகுதியில் குறுக்கிடும் ரெயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் உள்ளது. இவ்வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென நுள்ளி விளை ரெயில்வே மேம்பாலத்தினை விரிவுபடுத்திட நெடுஞ்சாலைத்துறை இடத்தினை கையகப்படுத்தியது. இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு அதிக அளவில் ஏற்படாதபடி அளவீடுகள் செய்யப்பட்டது.
தற்போது இப்பாலத்தின் தெற்குபகுதியில் மற்றொரு பாலம் அகலமாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டு இதற்கென இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், கடைகள் ஆகியவற்றை அகற்ற துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சாலையில் உள்ள பாலத்தை விரிவுபடுத்தாமல் மற்றொரு பாலம் கட்டுவது எதற்காக? என்ற கேள்வி எழுகிறது.மேலும் இதனால் ரூ 60 கோடிக்கு மேல் விரயமாவதுடன் 30 க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் பாதிக்கப்படும்.
இப்பகுதி மக்களிடம் இதுதொடர்பாக எவ்வித விளக்கமும் அளிக்காமல் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் பாலம் எதற்கு எனக் கேட்டால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க என எதற்கும் பொருந்தாத பதிலைக் கூறி இவர்கள் சமாளிக்கப் பார்க்கின்றனர்.
ஏற்கனவே உள்ள சாலையில் மேம்பாலம் அமைப்பதால் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறுகளும் ஏற்படபோவதில்லை. அதைவிட்டு குடியிருப்பு பகுதியினை அகற்றும் நோக்கத்தோடு தேவையற்ற, பணவிரயத்தை உருவாக்கிடும் மக்களுக்கு பாதிப்பை உருவாக்கிடும் இப்புதிய திட்டத்தினை நிறைவேற்றிட கூடாது என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரி கோட்டச்செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் P.சந்திரா மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply