சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு-
நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து தலைநகரான சென்னைக்கு இரட்டை ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் கன்னியாகுமரியில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை இணைக்கும் வகையில் இரட்டை ரயில் பாதைக்கென பணிகள் நடந்துவருகின்றன. மேலும் இவ்வழிதடத்தில் சரக்கு ரயில் செல்வதற்கு என 3வது வழித்தடமும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ரயில் வழித்தடத்திற்கு என நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ரயில் வழித்தடத்தை ஒட்டி செல்லும் பழையாற்றில் பாலம் அமைக்கப்படுவதாக தெரிகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. நீர்பிடிப்பு இல்லாத பகுதிகளில் மண்ணை நிரப்பி பில்லர் அமைப்பர்.நீர்நிலைகளில் பணி நடைபெறும் போது அப்பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் பாலம் அமைப்பர். ஆனால் அதிக அளவில் நீர் ஓட்டம் கொண்ட பழையாற்றில் மண்ணால் மூடி வருகின்றனர்.
மாவட்டத்தின் முக்கிய நீர்நிலையான பழையாறு முக்கிய ஆறாக திகழ்வதோடு நாகர்கோவில் நகரின் வடிகாலாகவும் உள்ளது. மழைகாலங்களில் அதிக அளவில் நீர்பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மண் போட்டு நிரப்பி உள்ளதால் அதன் அகலமும், பரப்பும் குறைந்து நீர் வெளியேறும் நிலை உள்ளது. இதனால் அருகே உள்ள கோதை கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கி பாதிப்பு அடையும் நிலை உள்ளது.
நீர்வழித்தடத்தை நிரப்பி பாலம் அமைக்க அனுமதி அளிக்கவில்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ள நிலையில் யார் அனுமதியுடன் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுகிறது.? பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய நீர் ஆதாரத்தை ஆக்கிரமிப்பது அரசு ஆக இருந்தால் தவறு இல்லையா? உள்ளிட்ட கேள்விகள் எழுகிறது. பாசனத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமான பழையாற்றில் மண்கொட்டப்படுவது தடுக்கப்படுவதோடு, கொட்டப்பட்ட மண்ணையும் அகற்ற வேண்டும். மாற்று நடவடிக்கை மூலம் இப்பகுதியில் ரயில் பாலம் அமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன், மகளிர் அணிசெயலாளர் R. சாராபாய், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணிச் செயலாளர் C.V.முருகன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply