நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புறநகர் செல்லும் பேருந்துகள் வடசேரியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.இங்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் செலவில் இலவச பொதுகழிப்பிடம் கட்டப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த பயன்தருவதாக காணப்படுகிறது.
இக்கழிப்பிடம் மேல்மாடியில் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் தரைத்தளத்தில் கடைகள் கட்டி மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. இதில் தற்போது உணவகம், பேக்கரி, டீ கடை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இக்கடைகள் பேருந்துநிலைய பகுதியில் அமைந்து உள்ளதால் இதனை பயணிகள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேல்தளத்தில் கழிப்பிடம் அமைந்து உள்ளதால் இப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுகள் கட்டுமான பாதிப்பு மற்றும் வெளியேற்று குழாய் கசிவுகள் ஏற்பட்டால் தரைதளத்தில் செயல்படும் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அவலநிலையே உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடும், மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழலுமே இங்கு உள்ளது. இருந்தும் மாநகராட்சி சார்பில் இதனை கண்டு கொள்ளாமல் மக்கள் நலனை புறம்தள்ளி வணிக நோக்கத்தில் இக்கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மக்கள் நெருக்கடி மிகுந்த இப்பகுதியில் செயல்பட்டு வரும் இத்தகைய உணவகங்கள் குறித்து சுகாதாரத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் கவலை கொண்டதாக தெரியவில்லை. சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு உள்ளாகும் நிலை அதிகமாகவே உள்ளதால் வந்தபின் மனம் வெந்து எந்த பலனும் இல்லை.ஏதாவது அசம்பாவிதங்கள் வராமல் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமான ஒன்றாகும். எனவே இலவச பொதுகழிப்பிட அடிவாரப் பகுதியில் இத்தகைய கடைகள் செயல்பட தடை விதித்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் C.V.முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், மருத்துவர் அணி செயலாளர் Dr.A. பெர்லின்ங்டன் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply