மேலப்பாளையம் நகராட்சி பகுதி திருநெல்வேலி மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது. சுமார் 21/2 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்பகுதியான இப்பகுதியில் இருந்து திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் புறநகர் பேருந்து நிலையமான வேய்ந்தான் குளம் பேருந்து நிலையத்திற்கு செல்ல பேருந்து வசதி உள்ளது
ஆனால் இங்கிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள ஐகிரவுண்ட் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல எந்தவிதமான பேருந்து வசதிகளும் இல்லை. இப்பகுதியில் இருந்து குறிப்பிட்ட மருத்துவமனை மற்றும் இப்பகுதிக்கு செல்ல புறநகர் பேருந்துநிலையம் அல்லது பாளையங்கோட்டை அல்லது திருநெல்வேலி ஜங்ஷன் சென்று அங்கிருந்து மீண்டும் ஐகிரவுண்ட் செல்லும் பேருந்தினை பிடிக்க வேண்டி உள்ளது.
இதனால் முதியோர், பெண்கள், உடல்நலம் பாதிப்புக்கு உள்ளானவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களை பிடிக்க வேண்டி உள்ளதால் பண விரயமும், சிரமமும், கால இழப்பும் ஏற்படுகிறது.
மேலப்பாளையம் பகுதியில் இருந்து தினமும் ஐகிரவுண்ட் பகுதிக்கு ஏராளமான மக்கள் தினமும் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டே தினமும் சென்று வருகின்றனர். இருப்பினும் இதுவரையில் இங்கிருந்து நேரடியாக எந்தவித பஸ் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இதுபற்றி இப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் இவர்களது கோரிக்கை கடலில் விழுந்த மழைத்துளி போலவே உள்ளது.
பல லட்சம் மக்கள் வாழும் மேலப்பாளையம் மக்களின் துயர் போக்கிடும் வகையில் இங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல ஏதுவாக போதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தமிழக முதல்வர் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply