சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர்
T. குழந்தைசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைமை நிலைய செயலாளர் S.ராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் P.சந்திரா செயல் அறிக்கையும் பொருளாளர் S.மைக்கேல்ராஜ் வரவு-செலவு அறிக்கையும் அளித்தனர்.
பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் மாநில பார்வையாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் S.ஜேசுராஜ், K.சில்வெஸ்டர், துணை செயலாளர் பேரா. C.மோகன், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், ரத்ததான பிரிவு செயலாளர் J. ஆன்றனி மைக்கேல், மீனவர் அணிச்செயலாளர் A. ததேயுஸ், தியாகிகள் புகழ் பரப்பு அணிச் செயலாளர் C. டைட்டஸ் ராஜ், நாகர்கோவில் மாநகர செயலாளர் ட. அனிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் குமரி மாவட்ட ஒன்றியம் மற்றும் மாநகர பகுதியில் இயக்கத்தினை முழுமையாக கட்டமைக்கவும், பணிகளை கண்காணிக்கவும் மாவட்ட பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி தோவாளை ஒன்றிய பார்வையாளராக J. ஆன்றனி மைக்கேல் / அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளராக பொன்.மாரியம்மாள்/ ராஜாக்கமங்கலம் ஒன்றிய பார்வையாளராக S. நவீன் கிளாட்சன் / தக்கலை ஒன்றிய பார்வையாளராக S.ஜேசுராஜ்/ குருந்தன்கோடு ஒன்றிய பார்வையாளராக A. ததேயுஸ் / திருவட்டார் ஒன்றிய பார்வையாளராக C. டைட்டஸ் ராஜ்/ மேல்புறம் ஒன்றிய பார்வையாளராக M.கேதரின் பேபி / கிள்ளியூர் ஒன்றிய பார்வையாளராக புதுக்கடை பாண்டியன்/ முஞ்சிறை ஒன்றிய பார்வையாளராக பேரா. C. மோகன் / நாகர்கோவில் மாநகர பார்வையாளர்களாக S. மைக்கேல்ராஜ், R. சாராபாய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் சாலைகளில் வேகத்தடைகளில் அதனை தெரிவிக்கும் விதமான குறுக்கு வர்ண பட்டைகள், ஒளிரும் பிரதிபலிப்பான்கள் பதிப்பிக்காத நிலையில் அநேக விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply