சமூக பொதுநல இயக்கம்

நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!

குமரி மாவட்டத்தில் அழிந்து வரும் வெங்கலராஜன் கோட்டை வரலாறு தடயங்கள் – சமூக பொதுநல இயக்கம் புகார்.

Social Welfare Movement’s Complaint Regarding the Deteriorating Venkalarajan Fort in Kumari District.

வெங்கலராஜன் என்னும் மன்னன் குமரி மாவட்டம் மணக்குடி பகுதியில் பாசறையும், அரண்மனையும் அமைத்து உள்ளார்.அவரது பெயரில் அழைக்கப்பட்ட பகுதி செண்பகராமன்புத்தன் துறை என்பது மருகி தற்போது கீழமணக்குடி என அழைக்கப்படுகிறது. தனது படை தளபதியான முகிலன் என்பவருக்கு குடியிருப்பை ஏற்படுத்திய பகுதி தற்போது முகிலன் குடியிருப்பு என அழைக்கப்படுகிறது. கண்டியில் இருந்து தன்னுடன் வந்த சித்தர்களுக்கு வழங்கிய பகுதி சித்தன்குடியிருப்பு எனவும் கலைஞர்களுக்கு வழங்கிய பகுதி கிண்ணிக்கண்ணன் விளை எனவும் கோட்டைக்கு தேவையான கற்களை எடுத்த பகுதி கல்லடி விளை எனவும் இன்றளவில் அழைக்கப்படுகிறது.

அரண்மனையை கட்டி வெண்கல கதவு நிறுவி ஆண்டதால் இந்த பகுதியின் நிலப்பகுதி இன்றும் வெங்கலக் கதவடி விளை என அழைக்கப்படுகிறது. பொற்றையடி துவங்கி அரபிக்கடல் வரை மண்கோட்டை அமைத்ததுடன் இலங்கைக்கு பழையாறு வழியாக படகு மூலம் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் இப்பகுதி வணிகத்துறைமுகமாகவும் செயல்பட்டு உள்ளது. இப்பகுதியில் 10கி.மீ நீளமுள்ள வெங்கலராஜன் சானல் இன்னும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. வடக்கு தாமரைகுளம், கரும்பாட்டூர், சாமிதோப்பு பகுதிகளின் விவசாயத்திற்கு இது முக்கிய பங்காற்றுகிறது.

வெங்கலராஜன் தனது ஆட்சிக்காலத்தில் பனைமரம் பொறித்த நாணயங்களை வெளியிட்டு உள்ளார். இதனை பிரிட்டிஷ் அரசு பணபரிமாற்றம் செய்து உள்ளது. இவருக்கு சங்குமுகத்தழகி, திரையமுகத்தழகி என இரு மகள்கள் இருந்து உள்ளனர் வேணாட்டு அரசர் ராமவர்மாவுடன் கி.பி 1555 ல் ஏற்பட்ட மோதலில் இவரது சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்தது. 25 ஏக்கர் பரப்பளவிலான கோட்டையின் பெரும்பகுதி 2004ல் ஏற்பட்ட சுனாமியில் சிதைந்து உள்ளது. அதன் பின் எஞ்சிய கோட்டை சுவடுகளை காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கோட்டை இருந்த தடயங்களை தேடவேண்டி உள்ளது.

வெங்கலராசன் ஆண்டபோது அவர் வழிபட்டதாக கருதப்படும் கோவிலும் பராமரிப்பின்றி பாழடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. வெங்கலராஜன் வரலாற்று சான்றுகள் அழிந்து வரும் நிலையில் அவரது பெருமையை கூறும் வில்லிசை பாடல்கள், நாடகங்கள், கல்வெட்டு குறிப்புகள் மூலம் இன்றுவரையில் அவர் அழியாமல் உள்ளார். இப்பகுதியில் வெங்கலராஜன் வரலாறு குறித்து முழுமையாக ஆய்வு செய்வதோடு அழிவின் பிடியில் தொலைந்து போகும் நிலையில் உள்ள எஞ்சிய வரலாற்று எச்சங்களை காப்பாற்றியாக வேண்டும். மேலும் வெங்கலராஜன் கட்டிய கோட்டை சிதைவுகளை சீர்செய்து வரலாற்றை வெளிப்படுத்திடும் வகையில் அரசு சார்பில் இப்பகுதியில் மாதிரி கோட்டையினை அமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, அமைப்புச் செயலாளர் புதுக்கடை.பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், சமூக சீர்திருத்த அணிச் செயலாளர் பொன்.மாரியம்மாள்,அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அமைப்பு செயலாளர் R. முத்துகுமார், தோவாளை ஒன்றிய நலிந்தோர் மேம்பாட்டு பிரிவு செயலாளர் P.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

Fading Traces of Vengalarajan Fort History in Kumari District - Samuga Pothunala Iyakkam Complaint
Vanishing Historical Traces of Venkalarajan Fort in Kanyakumari District - Social Welfare Movement Complaint

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *