குமரி மாவட்டம் 1956ம் ஆண்டு நவம்பர் 1 ந்தேதி உதயமானது. அதுவரையில் மாவட்டத்தின் பகுதிகள் கேரள திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் தமிழ்மொழி பேசிவந்த மக்கள் கடும் இன்னலுக்கும், கொடுமைகளுக்கும் உள்ளாகினர்.
இதையடுத்து ஏற்பட்ட கிளர்ச்சி போராட்டமாக உருப்பெற்றது. ஆதிக்க அடக்குமுறைக்கு எதிராக மார்ஷல்.நேசமணி தலைமையில் பல்வேறு தலைவர்களது பங்களிப்புடன், உயிர்தியாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பெற்று இன்று 70வது வயதில் அடி எடுத்து வைக்கிறது.
இதையொட்டி சமூக பொதுநல இயக்கம் சார்பில் பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள நேசமணி மணிமண்டபத்தில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தலைவர் T.குழந்தைசாமி, செயலாளர் P.சந்திரா, துணை தலைவர்கள் S.ஜேசுராஜ், M..கேதரின் பேபி, மகளிர் அணி செயலாளர் R. சாராபாய், தியாகிகள் புகழ் பரப்பு அணி செயலாளர் C.டைட்டஸ், சமூக சீர்திருத்த அணி செயலாளர் பொன்.மாரியம்மாள், ஆரல்வாய்மொழி பேரூர் நிர்வாகி S.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply