சாலைகளில் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கை செய்து அவர்களது வேகத்தை குறைக்கும் வகையில் வேகத்தடை அமைந்த பகுதிகளில் வேகத்தடை கோடுகள் கருப்பு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் கோடுகள் அல்லது செவ்வக வடிவங்கள் போடப்படும். இவை Thermoplastic Paint மூலம் போடப்படுவதால் நீடித்து நிலைப்பதுடன் அதிக தெரிவு திறன் கொண்டதாக திகழும்.
இதுபோல் வேகத்தடையின் மேல் அல்லது அருகில் பொருத்தப்படும் பிரதிபலிப்பான்கள் இரவு நேரம், மழை அல்லது மூடுபனி காலங்களில் வேகத்தடை இருப்பதை அறிய இயலும். வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்தி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இந்தியாவில் IRC வழிகாட்டுதலின்படி இவை கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி.மாநில நெடுஞ்சாலைகளில் அநேக இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. ஆனால் அவற்றை தெரிவிக்கும் எச்சரிக்கை குறியீடுகள் அல்லது கோடுகள் மற்றும் பிரதிபலிப்பான்கள் சரிவர அமைக்கப்படவில்லை. ஏற்கனவே எழுதப்பட்ட கோடுகள் அழிந்த நிலையில் புதிதாக குறிப்பிட்ட பகுதியில் எச்சரிக்கை கோடுகள் எழுதப்படாமல் பல இடங்கள் காட்சி அளிக்கின்றன.
இதனால் வேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையினை கடந்து செல்லும் போது விபத்துக்கு உள்ளாகின்றன. இத்தகைய சம்பவங்களால் பல உயிர் இழப்புகளும் நிகழ்ந்து உள்ளன. குறிப்பாக பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் எச்சரிக்கை கோடுகள் இல்லாத நிலையில் உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவிகள், நோயாளிகள் பெரிதும் பாதிப்பு அடையும் அவலநிலை உள்ளது. எனவே பொதுமக்களின் பாதிப்பை போக்கிடும் வகையில் குமரி மாவட்டத்தில் வேகத்தடை அமைக்கப்பட்ட சாலை பகுதிகளில் எச்சரிக்கை கோடுகள் மற்றும் பிரதிபலிப்பான்கள் அமைத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தென்மண்டலச் செயலாளர் ஞாலம்T.ஜெகதீஷ், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி. செயலாளர் P.சந்திரா, அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E.சுரேஷ், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், தோவாளை ஒன்றிய செயலாளர் Y.ராகுல் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply