கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட வள்ளவிளை பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் கீழ் சுமார் 2 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எல்லா குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்க வேண்டிய நிலையில் குடும்ப அட்டை அதிக எண்ணிக்கையில் உள்ளதால் எல்லோரும் பொருட்களை வாங்க முடியாத நிலையே வாடிக்கையாக உள்ளது.
மீனவர் கிராமமான வள்ளவிளை பகுதியில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் கடல்சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர்கள் இதனால் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது மின்னணு முறையில் பொருட்கள் வழங்கப்படுவதால் ஒவ்வொரு நபருக்கும் பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிப்பித்து பின்னர் அளவீடுகளை கணக்கிட்டு பொருட்கள் வழங்க கால அவகாசம் தேவைப்படும். மேலும் ஒரே பணியாளர் மட்டுமே உள்ளதாலும் உதவியாளர் நியமிக்கபடாததாலும் பொருட்கள் வழங்க காலம் ஆவதை தவிர்க்க இயல்வதில்லை.
ஒரே கடையில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக குடும்ப அட்டைகள் உள்ளதால் இவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகளால் அவர்கள் வரும் போது குறிப்பிட்ட நேரத்தில் பொருட்கள் வழங்க முடியாது. இதனால் இவர்கள் பொருட்கள் வாங்க இயலாமல் அலைக்கழிப்புக்கு உள்ளாகும் நிலை இப்பகுதியில் உள்ளது. இத்தகைய சூழலில் வள்ளவிளை கிராம மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது போன்ற நிலையால் பெண்கள், முதியோர், தொழிலாளிகள் உள்ளிட்ட சகல தரப்பினரும் கடும் பாதிப்பிற்கும், காலவிரயத்திற்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகும் நிலை உள்ளது. எனவே இதனை தடுத்திடும் வகையில் இப்பகுதியில் கூடுதலாக ரேஷன் கடை அமைத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் M.கேதரின் பேபி, செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் பேரா. C. மோகன்,அமைப்பு செயலாளர் புதுக்கடை பாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் E.சுரேஷ்,மீனவர் அணிச் செயலாளர் A.ததேயுஸ் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply