தக்கலை ஊராட்சி ஒன்றியம் நுள்ளி விளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாறை பகுதியில் கிராமத்தின் மத்தியில் இடிபாடுகளுடன் ஒருசில கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவை கைவிடப்பட்டதால் எஞ்சி நிற்கும் கட்டுமானங்கள் அவை மக்களுக்கு பயன்பட்டதற்கான சாட்சிகளாய் நிற்கின்றன. பெரும்பாலான பகுதிகள் இடிந்து மண் மேடாகி இருக்கும் சுவர்களும் தங்கள் அந்திம காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
குறிப்பிட்ட பகுதி கைத்தறி நெசவாளர்களுக்கான கூடமாக பயன்பட்டு வந்து உள்ளது. அதன்பின் செயல்படாத காரணத்தால் கவனிப்பாரற்ற அனாதையாய் இக்கட்டிடம் விடப்பட்டு உள்ளது. இதனால் இவை எவருக்கும் பயனற்று காணப்படுகிறது. இக்கிராமத்தில் சமூக நலக்கூடம் இல்லாத நிலையில் குறிப்பிட்ட இடத்தினை இத்தேவைக்கு என வழங்கினால் மக்கள் பயன்பெறுவர்.
குறிப்பிட்ட திட்டத்திற்காக இடம் கையகப்படுத்தப்பட்டு மக்கள் பணத்தில் கட்டுமானங்கள் எழுப்பபடுகிறது. அதன் பின் தவிர்க்க இயலாத சூழலில் குறிப்பிட்ட திட்டம் செயல்படாத போது குறிப்பிட்ட இடம் எவ்வித பயன்பாடுகளுக்கும் வழங்கப்படாமல் அப்படியே விடப்படுகிறது. அரசின் அத்தனை துறைகளிலும் இவ்வாறு கைவிடப்பட்டு அழிந்து வரும் கட்டிடங்கள் மாவட்டத்தில் பல உள்ளன. இவை ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அகப்படுவதால் மக்களுக்கு பயன் அற்று அரசின் வரிப்பணமும் விரயம் ஆகும் நிலையே தொடர்கிறது.
அந்த வகையில் மேல்பாறை பகுதியில் உள்ள கைத்தறி நெசவுக்கூடம் இருந்த பகுதியும் காட்சி அளிக்கிறது. காலத்தால் களவாடப்பட்ட இப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்டு வருகிறது.அழிந்து வரும் இப்பகுதியை கிராம மக்கள் தேவைக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திடும் நோக்கத்திற்காக வழங்கிட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர்
T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ், செயலாளர் Pசந்திரா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் E.சுரேஷ், தக்கலை ஒன்றிய செயலாளர் L. தேன் ரோஜா, மேல்பாறை கிளை தலைவர் நாகராஜன், செயலாளர் வின்சென்ட், மகளிர் அணி தலைவர் நிர்மலா, செயலாளர் சுஜா மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.














Leave a Reply