நாகர்கோவில் புறநகர் ரோட்டரி சங்கம் மற்றும் சமூக பொதுநல இயக்கம் இணைந்து சர்க்கரை நோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நாகர்கோவிலில் நடத்தியது. இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்க தலைவர் M.R.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
சமூக பொதுநல இயக்க தென்மண்டலச் செயலாளர் ஞாலம் T.ஜெகதீஷ், குமரி மாவட்ட செயலாளர் Pசந்திரா, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் Dr.A. பெர்லின்ங்டன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மருத்துவர்கள் K.விஜயகுமார், V.சண்முகம், P. அனிதா, R.S.சுஜின், A ஜோதி நடராஜன், சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்வில் சமூக பொதுநல இயக்க மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் R. சாராபாய், சமூக சீர்திருத்த அணி மாவட்ட செயலாளர் பொன்.மாரியம்மாள், ஆரல்வாய்மொழி பேரூர் அமைப்பு செயலாளர் S.ரமேஷ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply