சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
சிங்காரச் சென்னை மழை காலங்களில் மக்களை சிரமப்படுத்தும் சென்னையாகிப் போகிறது. தமிழக தலைநகரம் மக்களை தத்தளிக்க விடுகிறது. சென்னை தொடர்ந்து இவ்வாறு பாதிப்பு அடைவதற்கான காரணத்தினை தேடினால் ஆத்திரம்தான் மிஞ்சும். காரணம் பல நூறு ஏரிகள் இருந்த சென்னை அதனை தொலைத்து போய் விழிபிதுங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதியில் குளம் இருந்த நிலை மாறி குளத்தில் குடியிருப்பு உருவான நிலையில் மழைநீர் தன் இடம் தேடி மக்களிடம் மன்றாடி வருகிறது.
உதாரணமாய் ஒரு ரணம்.. வேளச்சேரி ஏரியின் மொத்த அளவு 256 ஏக்கர். ஆனால் தற்போது இருப்பது வெறும் 56 ஏக்கர். இவ்வாறு மரணம் அடைந்த ஏரிகளின் பட்டியல் இதோ..நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடிஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி,
ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி,
பள்ளிக்கரணை ஏரி,போரூர் ஏரி,
ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி,இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி,பெரும்பாக்கம் ஏரி,பெருங்களத்தூர் ஏரி(இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்),
கல்லு குட்டை ஏரி,வில்லிவாக்கம் ஏரி,
பாடிய நல்லூர் ஏரி,வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி,திருநின்றவூர் ஏரி,
பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி,
முடிச்சூர் ஏரி,சேத்துப்பாடு ஏரி (ஸ்பர் டாங்க் – ஸ்பர்டாங்க் ரோடு),
செம்பாக்கம் ஏரி,சிட்லபாக்கம் ஏரி போரூர் ஏரி,மாம்பலம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி,சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்…..வேளச்”ஏரி”.செம்மஞ்”ஏரி”
ரெட்”ஏரி”பொத்”ஏரி”கூடுவாஞ்”ஏரி”
அடை”ஆறு”(அடர்ந்த ஆறு)
அணை”காபுத்தூர்
பள்ளிக்கர”அணை”
காட்டாங்”குளத்தூர்” இவை எல்லாம் 1967க்கு பின் சென்னை நகரமயமாதலால் தொலைந்து போன ஏரிகள்.
நீர்நிலைகள் வெறுமனே விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரத்திற்கும் மட்டுமல்ல வெள்ள காலத்தில் வடிகாலாக இருந்து நம்மை காக்கும் கரங்கள் அவை. இத்தகைய கரங்கள் இல்லாததால் மக்கள் உதவும் கரங்களை எதிர்நோக்குகின்றனர். நீர்தேக்க முடியாத நிலையில் கடலில் நீரை வடியவிடுவதால் தண்ணீர் பஞ்சத்திற்கு உள்ளாகும் நிலை தவிர்க்க முடியாததாக உள்ளது. சென்னையில் கூவம், அடையாறு மற்றும் தென்சென்னை யில் கடலில் நீர் கலக்கும் நிலை இருப்பினும் நீர்நிலைகள் அழிவால் வெள்ள பாதிப்பினை தடுக்க இயலாத நிலையே உள்ளது.
இத்தகைய பாதிப்புகளை தடுக்கும் நோக்கத்தில் வெள்ள வடிகால் பணிக்கு என கடந்த 2021ல் ரூ 4 ஆயிரம் கோடி செலவில் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டது. இருந்தும் சிறுமழைக்கே சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கும் அவலமே அரங்கேறி உள்ளது. இதனால் பல ஆயிரம் கோடி என்ன ஆனது? என்ற கேள்வி எழுகிறது. முறையாக திட்டமிடாமையும், முழுமையான பணிகள் மேற்கொள்ளாததாலும் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலையே தொடர்கிறது..சிந்துபாத் கதைபோல் தொடரும் சென்னை துயருக்கு தீர்வுதான் எப்போது?
தலைமைச்செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.













Leave a Reply