சமூக பொதுநல இயக்கம் புகார்.
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-
பொறியியல் பட்டதாரிகள் B.Ed பயில்வதற்கு கடந்த 2015 முதல் 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு அதன் மூலம் பலர் ஆசிரியர் ஆகும் கனவில் படித்து முடித்தனர். 2019 ல் பொறியியல் பட்டதாரிகள் B.Ed படித்திருந்தால் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 6 முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம் என்ற அரசாணை தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய பின் அவர்களுக்கு உரிய பணிகள் வழங்கப்படவில்லை. TRB தேர்வு எழுத தகுதி இல்லை எனக் கூறி இவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
இத்தகைய நிலையினால் ஆசிரியர் கனவோடு இருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழக அரசு அரசாணை வெளியிட்டும் அவை நடைமுறை படுத்தப்படாத நிலையில் ஆசிரியர் ஆகும் எண்ணத்தோடு பணத்தையும், காலத்தையும் செலவழித்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது.பி.இ. பட்டதாரிகளிடம் நீங்கள் வேண்டுமானால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ முயற்சியுங்கள் எனக் கூறி அவர்களது ஆசிரியர் முயற்சிகளுக்கு முட்டுகட்டை போட்டனர்.
பொறியியல் பட்டதாரிகள் B.Ed படிக்கலாம் என்றவர்கள், ஆசிரியராக தகுதி தேர்வு எழுதலாம் என்றவர்கள் எல்லாம் முடித்து தகுதி ஆனபின் அவர்களை தட்டி கழிப்பது எந்த வகையில் நியாயம்? அரசே B.E. பட்டதாரிகளிடம் நம்பிக்கை துரோகம் செய்து அவர்கள் வாழ்க்கையுடன் விளையாடுவது சரிதானா? அரசாணை வெளியிட்டும் அதனை நடைமுறைபடுத்தாதது யார் தவறு? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்கள் யாரிடம் போய் கேட்பது?
இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறை பிப்ரவரி 2025ல் புதிதாக வெளியிட்டு உள்ள அரசாணையில் கொல்கத்தாவில் உள்ள மேற்குவங்க தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் வழங்கப்படும் பி.டெக் எலக்ட்ரிக் பொறியியல் படிப்பானது வேலைவாய்ப்பு வகையில் பி.இ எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் படிப்புக்கு சமமானது எனவும் B.E படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் B.Ed படித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக 6முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு பயிற்றுவிக்க தகுதியானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே படித்து முடித்து ஆசிரியர் பணியினை நோக்கி கிடைக்காமல் விரக்தியில் இருப்பவர்களுக்கு வழிகாட்டாத அரசு மீண்டும் ஓர் அரசாணை பிறப்பித்து உள்ளது ஏமாற்றம் தருவதாகவே உள்ளது. மேலும் பலர் இதனை நம்பி தங்கள் வாழ்க்கையினை இழப்பதற்கே இது வழிகாட்டுவதாக உள்ளது.. உச்சநீதிமன்றம் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என அளித்த தீர்ப்புக்கு தமிழக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களை அரசு பாதுகாக்கும் என்கிறார்.அரசை நம்பி பயின்று எதிர்பார்ப்புகளோடு இருக்கும் B.E. பட்டதாரிகளை பாதுகாப்பது யார்?
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply