ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட மூவேந்தர் நகர் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 25 வருடத்திற்கும் மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பேரூராட்சி மூலம் தெருவில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட குடிநீர் குழாயினை துண்டித்தனர். இதனால் குடிநீர் விநியோகம் தடை செய்யப்பட்ட நிலையில் இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக பரிதவித்து வருகின்றனர். நீருக்காக தொலைதூரம் சென்று அலைய வேண்டிய நிலையில் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பிட்ட குடியிருப்பு மக்கள் இருக்கும் பகுதி அரசு பொதுப்பணித்துறைக்கு உரிய நிலம் என அரசு பதிவேடுகளில் உள்ளது. இருந்தும் இப்பகுதி மக்களை அப்புறபடுத்திடும் நோக்கில் ஜே.சி.பி எந்திரங்களை கொண்டு இங்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை இடிக்க முயன்று வருகின்றனர். பேரூராட்சியின் இத்தகைய அத்துமீறல்களால் குடியிருப்பு மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக அரசின் பொதுப்பணித்துறைக்கு உரிய இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்படும் நிலையில் இப்பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி திட்டமிட்டு அகற்ற முயற்சிப்பது ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான அத்துமீறலாகவே உள்ளது.
எனவே குடியிருக்கும் இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரை தடையின்றி விநியோகம் செய்வதுடன், இவர்கள் மீதான அத்துமீறல்களை தடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் கிராம மக்கள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.











Leave a Reply