சமூக பொதுநல இயக்க குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணை தலைவர் S.ஜேசுராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணை பொதுசெயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, தலைமை நிலையச் செயலாளர் S.ராஜ் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் A.S.சங்கரபாண்டியன் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.மாவட்ட செயலாளர் P.சந்திரா, பொருளாளர் S. மைக்கேல்ராஜ் செயல் மற்றும் நிதி அறிக்கை அளித்தனர்.
இக்கூட்டத்தில் துணை தலைவர் K.சில்வெஸ்டர், மகளிர் அணிச் செயலாளர் R. சாராபாய், மருத்துவர் அணிச் செயலாளர் Dr.A. பெர்லின்ங்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் E சுரேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணிசெயலாளர் C.V.முருகன், ரத்ததானப்பிரிவு செயலாளர் J ஆன்றனி மிக்கேல், விவசாய அணிச் செயலாளர் N.கிருஷ்ணன், சமூக சீர்திருத்த அணி செயலாளர் பொன்.மாரியம்மாள், நாகர்கோவில் மாநகர செயலாளர் L. அனிதா, நிர்வாகிகள் A.ததேயுஸ், நவீன் கிளாட்சன், C.T. மன்னன் பாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைபப் பகுதியில் சட்டவிரோதமாக பெருமளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் சுற்றுசூழலும், இயற்கைவளமும், நீர் ஆதாரமும், விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இத்தகைய கல்குவாரிகளை தடை செய்திட வேண்டும். நாகர்கோவில்- மேலப்பெரு விளை மற்றும் வடசேரி- ஆலம்பாறை செல்லும் மினி பேருந்துகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்லாமல் இடைவழியிலேயே திரும்பி செல்கிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதால் முறையாக இவற்றை இயக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தலைமைச் செயலகம்,
சமூக பொதுநல இயக்கம்.

















Leave a Reply