சமூக பொதுநல இயக்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்வு குமரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் நுள்ளிவிளை ஊராட்சி மேல்பாறை கிராமத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தக்கலை ஒன்றிய செயலாளர் L. தேன்ரோஜா தலைமை வகித்தார்.
மாவட்ட துணைதலைவர் S.ஜேசுராஜ், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் A. கணபதி,பர்ணபாஸ் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் A.S.சங்கர பாண்டியன் கலந்து கொண்டு செயல் திட்ட உரையாற்றினார்.
மேல்பாறை கிராம மக்கள் இந்நிகழ்வின் போது தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிவித்ததுடன் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்ட சமூக பொதுநல இயக்கத்திற்கு நன்றிகளை தெரிவித்தனர்.
மேல்பாறை கிராம கிளையின் தலைவராக நாகராஜன், துணைத்தலைவராக ஜெயச்சந்திரன், செயலாளராக D. வின்சென்ட், பொருளாளராக C.செந்தில், மகளிர் அணி தலைவராக T.C.நிர்மலா, செயலாளராக D.சுஜா ஆகியோர் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைமைச்செயலகம்.
சமூக பொதுநல இயக்கம்.















Leave a Reply