Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

எண்ணூரில் கொசஸ்தலை ஆற்றில் ரசாயன கழிவுகளால் செத்து மிதக்கும் மீன்கள் – சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயன கழிவுகளால் இறந்து மிதக்கும் மீன்கள்

எண்ணூர் கழிமுகம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் பெருமளவில் மீன்கள் இறந்து மிதக்கின்றன. மடவை, கிழங்கான், ஊடான், கார்வா, கெளத்தி, இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகை கடல்வாழ் உயிரினங்களும் இவ்வாறு குவியலாக உள்ளன. சுமார் 10கி.மீ தொலைவு வரை இவ்வாறு டன் கணக்கில் மீன்கள் இறந்த நிலையில் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் உள்ள ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட ரசாயனக் கழிவுகளே காரணம் என கருதுகின்றோம்.

கொசஸ்தலை ஆறும், எண்ணூர் கழிமுகமும் நீண்டகாலமாகவே தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்ட பகுதிகளாகவே காட்சி அளிக்கின்றன. இங்குள்ள அனல்மின்நிலையங்களில் இருந்து வரும் ஃப்ளை ஆஷ், எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து வரும் எண்ணை கசிவுகள், பிற தொழிற்சாலைகளில் இருந்து வரும் கனரக உலோகம் கலந்த கழிவுகள், சாக்கடை கழிவுகள் குறிப்பிட்ட பகுதியில் உயிரினங்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி வருகிறது.

இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலமுறை எச்சரித்தும் இதுவரை சீரமைக்கவோ, சட்டவிரோதமாக கழிவுநீர் கலப்பவர்கள் மீதோ கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு உள்ளதோடு நீரின் தரம் மோசமாகி ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் மடியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதனால் இக்கழிமுகத்தை சுற்றி உள்ள பல கிராம மக்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

நீர்நிலைகள் தொழிற்சாலைகளின் வடிகாலாகவும், கழிவுநீர் கால்வாய் ஆகவும் மாற்றப்பட்டதின் விளைவாக தமிழ்நாடு முழுக்க ஏராளமான ஆறுகள் தன் ஜீவனை இழந்து தவிக்கின்றன. ஏனைய நீர்நிலைகளும் குப்பைமேடாக திகழ்வதால் நிலத்தடி நீர் பாதிப்பிற்கு உள்ளாவதோடு சுற்றுச்சூழலும், சுகாதாரமும் அடியோடு பாதிக்கப்படும் நிலையே ஏற்படுகிறது. இதுகுறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படாத வரையில் அரசின் மூலம் இப்பிரச்னைக்கு முடிவு ஏற்படுத்திடுவது இயலாத ஒன்றாகும்.

எண்ணூர் கழிமுகம் பகுதியில் மாசடைந்த நீரை தரப்பரிசோதனை செய்வதோடு இதுபற்றி விசாரணை நடத்தி மாசுபடுத்திய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் உள்ள இறந்து போன மீன்களை அப்புறப்படுத்துவதோடு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இதன் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மாசுபடுத்திய நிறுவனங்களிடம் இருந்து இழப்பீட்டு தொகை வழங்கிடவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் கழிவுகள் விடப்படுவதை தடுக்கவும், கண்காணிக்கவும், இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திடவும் வேண்டும். வளர்ச்சி என்பது இயற்கைககும், அனைத்து உயிரினங்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கவே கூடாது.

மீன்கள் இறப்பால் பாதிக்கும் எண்ணூர் கழிமுகம் - அரசு நடவடிக்கை தேவை
எண்ணூர் நீர்நிலைகளில் மாசுபாடு - சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு
கொசஸ்தலை ஆற்றை மாசுபாட்டில் இருந்து பாதுகாக்க கோரிக்கை
எண்ணூர் ஆற்றில் மீன்கள் இறப்பு - விசாரணைக்கு கோரிக்கை
கொசஸ்தலை ஆற்றில் ரசாயன கழிவு கலப்பை தடுக்க கோரிக்கை
எண்ணூர் கழிமுகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு - நடவடிக்கை கோரிக்கை
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் கொத்து கொத்தாக இறப்பு
எண்ணூர் கழிமுகத்தில் மீன்கள் இறப்பு - மாசுபாடு குற்றச்சாட்டு
கொசஸ்தலை ஆற்றில் ரசாயன கழிவுகளால் மீன்கள் இறப்பா?
எண்ணூர் கழிமுகத்தை காக்க சமூக பொதுநல இயக்கம் கோரிக்கை