Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

ரெயில்நிலையங்களில் பயணிகளுக்கு தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு பாதுகாப்பான தரமான குடிநீர் வழங்க கோரிக்கை

இந்தியாவில் 7469 ரயில் நிலையங்கள் மற்றும் ஹால்ட் நிலையங்கள் என சுமார் 8000 ரயில்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 14 ஆயிரம் பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் என சுமார் 25 ஆயிரம் ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 2 கோடி பயணிகள் ரயில்கள் மூலம் பயணிக்கின்றனர். மிகப்பெரிய பொது போக்குவரத்தாக ரயில்கள் திகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கை கடந்த 12 ந்தேதி நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கை கடும் அதிர்ச்சியினையும், கவலையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

சிஏஜி .குழு 16 மண்டலங்களைச் சேர்ந்த 512 முக்கிய ரயில் நிலையங்களை ஆய்வு செய்ததில் 458 ரயில்நிலையங்கள் அடிப்படை வசதிகளில் குறைபாடு கொண்டு இருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக ரயில்நிலையங்களில் உள்ள குடிநீரில் இ.கோலை எனப்படும் மனிதக்கழிவில் காணப்படும் பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குடிநீரில் குளோரின் அளவு 0.2-0.5ppm என்ற வரம்புக்குள் இருக்க வேண்டும். பல இடங்களில் இது குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தது தெரியவந்தது. தண்ணீர் டேங்குகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் பாசி மற்றும் மாசுபாடு இருந்து உள்ளது. இதனால் வயிற்றுபோக்கு, வாந்தி, காய்ச்சல், வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு நீரில் உருவாகும் நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

நீண்ட பயணம், வெப்பம், கூட்டம் ஆகியவற்றால் தரமற்ற நீர் டயரியா, காலரா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு தினசரி கோடிக்கணக்கான பயணிகள் ரயில் மூலம் பயணிக்கும் நிலையில் சிறிய பாதிப்பும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். ரெயில்வே போர்டு விதிகளின்படி அனைத்து ரயில் நிலையங்களிலும், குடிநீர் குழாய்கள் வாட்டர் கூலர்கள் போன்றவை கட்டாயமாக ஏற்படுத்திட வேண்டும். இது பயணிகளின் அடிப்படை வசதி மற்றும் மனித உரிமையுடன் தொடர்பு உடையது.

தரமான, பாதுகாப்பான குடிநீர் ரயில் பயணிகளுக்கு அளிப்பதால் அவர்களது உடல்நலத்தையும், பொதுசுகாதார த்தையும் பாதுகாப்பதாக அமையும். ஆனால் இவ்விஷயத்தில் அலட்சியமாக ரயில்வேத்துறை செயல்பட்டு உள்ளது சிஏஜி அறிக்கை மூலம் வெட்டவெளிச்சமாகி உள்ளது. ரயில்பயணிகளின் அடிப்படை தேவையான குடிநீர் உரிய பராமரிப்பும், பாதுகாப்புமின்றி விஷமாக விநியோகம் செய்யப்படுவதால் குழந்தைகள், முதியோர், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையினை எதிர்கொள்கின்றனர்.

குறிப்பிட்ட அறிக்கை இப்பிரச்னையில் ரெயில்வே துறை மற்றும் மத்திய அரசு தீவிரகவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை, மேம்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை காட்டுகிறது. எனவே ரயில் பயணிகளுக்கு சுகாதார பாதிப்பு உருவாக்காத சுத்தமான தரமான குடிநீர் வழங்குவது உறுதிபடுத்தப்பட வேண்டும். நாட்டின் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது போக்குவரத்தில் மக்கள் தேவைக்கான குடிநீர் வழங்குவது அடிப்படை தேவை மட்டுமல்ல. அரசின் அடிப்படை கடமையும் கூட..

ரெயில் நிலையங்களில் தரமான குடிநீர் வழங்க கோரிக்கை
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வலியுறுத்தல்
ரெயில் நிலைய குடிநீர் வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
ரயில் நிலையங்களில் குடிநீர் தரத்தை உறுதி செய்ய கோரிக்கை
பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் - கோரிக்கை
ரயில் நிலையங்களில் குடிநீர் வசதியில் கவனம் செலுத்த கோரிக்கை
ரயில் பயணிகளின் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்
ரெயில் நிலையங்களில் குடிநீர் பராமரிப்பை மேம்படுத்த கோரிக்கை
பயணிகளின் நலனுக்காக தரமான குடிநீர் வழங்க வலியுறுத்தல்
ரயில் நிலைய குடிநீர் வசதிகளை முறையாக பராமரிக்க கோரிக்கை