Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

அசாமில் இருந்து தமிழக கோவில்களுக்கு கொண்டுவரப்படும் யானைகள் – சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு.

அசாமில் இருந்து தமிழக கோவில்களுக்கு யானைகள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக பொதுநல இயக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்கனவே பார்வதி என்ற பெண்யானை உள்ளது. இந்நிலையில் துர்கா என்ற 5 வயது பெண்யானை அசாமில் இருந்து 3000 கி.மீ துரம் பயணித்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இதுபோல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு 8 வயது உடைய ஹீராலால், 6 வயது உடைய சிவா என்னும் யானைகள் கொண்டு வரப்பட உள்ளது. மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு ரூப்சிங் என்னும் 13 வயது யானையும், காஞ்சிபுரம் மடத்திற்கு உரிய கஜசாலைக்கு பிஜீலி என்னும் 5 வயது பெண் யானயும் அசாமில் இருந்து கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய கோயில்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இவ்வாறு யானைகள் கொண்டுவரப்படுவது தொடர்கதையாக உள்ளது.

யானை இயற்கையாகவே கூட்டமாக வாழும் காட்டு உயிரினம். காட்டில் அவை குடும்பமாக வாழும். பெண்யானைகள் தாய், பாட்டி, சகோதரி என உறவுகளுடன் பல ஆண்டுகளாக ஒன்றாகவே வசிக்கும். குட்டிகள் பல வருடங்கள் தாயுடன் இருந்து கற்றுக்கொள்ளும். காட்டில் ஒரு நாளைக்கு 10 முதல் 20 கி.மீ தூரம் நடக்கும். மண் குளிப்பது, நீர்நிலைகளில் குளிப்பது, மரங்களை உடைப்பது, வேர்களை தோண்டுவது இதன் இயல்பான பழக்கம். இதனை கோயிலில் சங்கிலியால் கட்டி கான்கிரீட் தரையில் நிறுத்தி வைப்பது அதன் இயல்பான குணத்தை முற்றிலுமாய் அழிக்கிறது. யானைகள் அதிக அறிவுத்திறன் கொண்டவை. அதனை தனிமைப்படுத்துவது மன அழுத்தம், மனநோய் உள்ளிட்ட பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

ஆசிய யானை வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ன் அட்டவணை 1 ன்படி அதிகபட்ச பாதுகாப்பு உயிரினமாக கூறுகிறது. அதனை காட்டில் இருந்து பிரிப்பது சட்டவிரோதம். 1977க்கு பிறகு காட்டுயானைகளை பிடிப்பது தடைசெய்யப்பட்டது. ஏற்கனவே சிறைபடுத்தப்பட்ட யானைகளை நன்கொடை என்ற பெயரில் மாற்றுவதற்கு விதிகள் உள்ளன. இந்த விதிகளை தவறாக பயன்படுத்தி காட்டுயானைகளை வளர்ப்பு யானைகள் என கூறி இடமாற்றம் செய்கின்றனர். 2023ல் மதுரை உயர்நீதிமன்றம் இனி கோயில்கள் யானை வாங்கக்கூடாது என உத்தரவிட்டது. 2.9.26 ல் உயர்நீதிமன்ற அமர்வு இத்தடையினை ரத்து செய்தது. இருப்பினும் முக்கிய வனஉயிரினமான யானையினை காட்டில் இருந்து பிரிப்பது சட்டப்படி குற்றமாகும்.

கோயில்களில் யானைகள் கடினமான தரையில் நிற்பதால் பாதம் அழுகல், முடக்குவாதம், மூட்டுவலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இயல்புக்கு மாறாக இனிப்பு, சமைத்த உணவு கொடுக்கப்படுவதால் உடல் பருமன், நீரிழிவு, மாரடைப்பு நேரிடுகின்றன. மனிதர்களிடம் இருந்து காசநோய் பரவுவதோடு, தோல் நோய்கள், சங்கிலியால் காயங்கள் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றன. மதம் பிடிக்கும் காலத்தில் தனிமைபடுத்தப்படுவதால் வன்முறை நடத்தையில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகிறது. இவை எதுவுமே காட்டில் இவற்றிற்கு நேரிடுவது இல்லை.

காட்டில் இருந்து ஒரு யானையினை எடுப்பதால் ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டமே பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இளம் பெண்யானையினை எடுப்பதின் மூலம் இனபெருக்கமே பாதிப்பிற்கு உள்ளாகிறது. யானை காட்டின் பரப்பை விரிவுபடுத்தும் முக்கிய உயிரினமாக திகழும் நிலையில் யானையினை பிரிப்பது காட்டின் ஆன்மாவையே அபகரிப்பதற்கு சமமானதாகும். பாரம்பரியம் என்ற பெயரில் காட்டு உயிரினத்தை தனிமைபடுத்தி சங்கிலியால் கட்டி வைப்பது அதன் மீதான வன்முறையாகவே கருத வேண்டி உள்ளது. எனவே நன்கொடை என்ற பெயரில் கோயில்களுக்கு யானைகள் அளிப்பது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும். கோயில் சடங்குகளுக்கு ரோபோ அல்லது சிற்பம் உள்ளிட்ட மாற்றுவழிகளை பரிசீலித்து யானைகளின் உயிர்வாழும் உரிமையினை பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அசாமில் இருந்து தமிழக கோவில்களுக்கு யானைகள்: சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு
கோவில் யானைகளுக்காக அசாமில் இருந்து யானைகளை கொண்டு வருவதை தடுக்க கோரிக்கை
தமிழக கோவில்களுக்கு யானைகள் கொண்டுவரப்படுவது ஏன்? சமூக பொதுநல இயக்கம் எதிர்ப்பு
யானைகளை காட்டில் இருந்து பிரித்து கோவில்களுக்கு கொண்டு வரக்கூடாது
அசாம் யானைகள் தமிழக கோவில்களுக்கு கொண்டு வரப்படுவதற்கு எதிர்ப்பு
கோவில் யானைகளின் நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
காட்டுயானைகளை கோவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை தடுக்க கோரிக்கை
யானைகளின் இயற்கை வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டும்: சமூக பொதுநல இயக்கம்
கோவில் யானைகள் விவகாரம்: அசாமில் இருந்து யானைகள் கொண்டுவர எதிர்ப்பு
யானைகளை நன்கொடையாக கோவில்களுக்கு வழங்குவதை தடை செய்ய வலியுறுத்தல்