தமிழ்நாட்டில் பெருநகரங்களில் நுண்பாசி திரவ மரங்கள் அமைக்கப்படுமா? சமூக பொதுநல இயக்கம் கேள்வி?
சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்த நுண்பாசி திரவ மரங்கள் (Liquid Trees) போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தியுள்ளது. கார்பன் டைஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடும் இந்த நுண்பாசி அமைப்புகள் நகர்ப்புற சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.