Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் குடிநீர் தரநிர்ணய ஆய்வகம் அமைக்க வேண்டும் – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தரநிர்ணய ஆய்வகங்கள் அமைக்க சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்

தமிழகத்தில் குடிநீர் மாசுபாடு ஒரு தீவிர பொதுசுகாதார பிரச்னையாக உள்ளது. தொழிற்சாலை கழிவுகள், கழிவுநீர் கலப்பு, வேளாண் ரசாயனங்கள், நிலத்தடி நீர் அதிக அளவிலான பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிநீர் அதன் இயல்பை இழப்பதோடு இதனால் நோய்பரவல் மற்றும் உயிர் இழப்புகளுக்கு காரணம் ஆகிறது. இப்பிரச்னையால் கடந்த 2024ம் ஆண்டில் தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வயிற்றுபோக்கு, 25,000 பேருக்கு டைபாய்டு, 70 பேருக்கு காலரா ஏற்பட்டு உள்ளது. மேலும் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய், தோல் நோய்கள், சுவாச பிரச்னைகளுக்கும் குடிநீர் மாசு அடிப்படை ஆதாரமாய் திகழ்கிறது.

இதனை கருத்தில் கொண்டு உள்ளாட்சிகளில் தரமான குடிநீர் விநியோகம் செய்ய ஆண்டிற்கு மூன்று முறை தரப்பரிசோதனை வழங்கும் பணியை சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலியில் உள்ள தலைமை குடிநீர் பகுப்பாய்வு மையங்கள் செய்து வருகின்றன. தமிழகத்தில் ஊராட்சிகளில் குடிநீர்தரப் பரிசோதனை செய்ய ஆய்வக வசதிகள் இல்லை. எனவே 38 மாவட்டங்களில் குடிநீர் பகுப்பாய்வு மையங்கள் ஏற்படுத்த அரசு திட்டமிட்டது.இதன்படி ஆய்வக நுட்பர், உதவியாளர் என 126 பேர் கடந்த மார்ச்.2025ல் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டனர்.

மாவட்டங்களில் குடிநீர் பரிசோதனை ஆய்வகங்கள் இல்லாத நிலையில் 42 வேதியாளர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர். மீதம் இருந்த பணியாளர்கள் நான்கு தலைமை குடிநீர் பகுப்பாய்வு மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த அக்டோபர். 2025ல் குறிப்பிட்ட 126 பணியாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குறிப்பிட்ட பணியாளர்களுக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், நிதி வராத காரணத்தால் இவர்கள் பணியை விட்டு நீக்கியதாக சுகாதாரத்துறை இயக்குனர் விளக்கம் அளித்தார். இதனால் இப்பணியில் இணைந்து கைவிடப்பட்ட ஊழியர்கள் நிர்கதியான நிலையில் தவித்து வருகின்றனர்.

மாவட்டங்களில் குடிநீர் தரப்பரிசோதனை மையம் அமைக்கப்படுவதின் மூலமே நீரின் தன்மையை ஆய்வு செய்து அதன்மூலம் ஏற்படும் நோய்கள் மற்றும் பாதிப்புகளை தடுக்க முடியும். தற்போது வேதியியல் மாசுக்கள், அதிகTDS, கன உலோகங்கள், குளோரைடு, சல்பேட், புளோரைடு நீரில் கலப்பது சாதாரண நிகழ்வாகிப்போனது. மழைக்காலம், வெள்ளம், வறட்சி போன்ற காலங்களில் நீர் மாசுபடுவது வாடிக்கையாகிப் போன நிலையில் நீர் பரிசோதனை மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் விநியோகம் என பரிசோதனை மேற்கொள்ள குறிப்பிட்ட காலத்திற்குள் செல்ல மாவட்டங்களில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

மாவட்ட அளவில் குடிநீர் தரப்பரிசோதனை மையம் செயல்படுத்தப்படுவதால் ஊராட்சி வரையில் விரைவான, நம்பகமான பரிசோதனை முடிவுகளின்படி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் உரிமையினை உறுதிபடுத்திட இயலும். எனவே உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல்களை நிறைவேற்றிடும் வகையிலும், மக்கள் நலனை பாதுகாத்திடும் நோக்கத்திலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர்தர நிர்ணய ஆய்வகங்கள் ஏற்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். ஏற்கனவே பணிபுரிந்தவர்களை மீண்டும் இப்பணியில் நியமிப்பதோடு மக்கள் சுகாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசே இதற்கான நிதியினை ஒதுக்கி இத்திட்டம் தடைபடாமல் செயல்படுத்திட வேண்டும்.

தமிழகத்தில் குடிநீர் தரநிர்ணய ஆய்வகம் அமைக்க கோரிக்கை
அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பரிசோதனை ஆய்வகம் தேவை
குடிநீர் தரத்தை உறுதி செய்ய மாவட்ட ஆய்வகங்கள் அமைக்க வேண்டும்
தமிழகத்தில் குடிநீர் தரப்பரிசோதனையை வலுப்படுத்த கோரிக்கை
குடிநீர் மாசுபாட்டை தடுக்க மாவட்ட ஆய்வகங்கள் அவசியம்
பாதுகாப்பான குடிநீருக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வகங்கள் தேவை
குடிநீர் தரப்பரிசோதனை ஆய்வகங்களை அமைக்க சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்
குடிநீரில் மாசுக்களை கண்டறிய மாவட்ட ஆய்வகங்கள் தேவை
குடிநீர் தரத்தை கண்காணிக்க தமிழகத்தில் புதிய ஆய்வகங்கள் தேவை
மக்கள் சுகாதாரத்திற்காக குடிநீர் ஆய்வகங்களை செயல்படுத்த கோரிக்கை