Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

ஆரல்வாய்மொழி-செண்பகராமன்புதூர் சாலையில் மாட்டுவண்டிப்போட்டி நடத்த தடை – சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல்.

ஆரல்வாய்மொழி-செண்பகராமன்புதூர் சாலையில் மாட்டுவண்டிப்போட்டிக்கு தடை விதிக்க கோரிக்கை

ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு சாலை பல்வேறு மலைகிராமங்களை இணைப்பதோடு கனரக வாகனங்கள் இவ்வழியாக இயக்கப்படுவதால் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து செயல்பாட்டில் இருக்கும். மேலும் தோவாளை தாலுகா தலைநகரமான பூதப்பாண்டி பகுதிக்கு செல்லும் பிரதான பாதையாக உள்ளதோடு குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களையும், வழிபாட்டு தலங்களையும் இணைக்கும் சாலையாகவும் திகழ்கிறது.

இந்நிலையில் இச்சாலையில் ஆரல்வாய்மொழி முதல் செண்பகராமன்புதூர் வரையிலான வழித்தடத்தில் அடிக்கடி மாட்டுவண்டிப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனால் இச்சாலையில் பல மணிநேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்றுபாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட வேதாந்திரி நகர், மிஷன் காம்பவுண்ட், கிருபை நகர், கிறிஸ்துநகர், தாணுமாலையன்புதூர், செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம், நெசவாளர்காலனி, இந்திராநகர், உள்ளிட்ட ஏராளமான கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தோடு இவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் பயணிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் செண்பகராமன்புதூர் அரசு மருத்துவமனை செல்லும் மருத்துவ பயனாளிகள் வெகுவாக பாதிக்கப்படுவதோடு பொய்கை அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல இயல்வதில்லை. வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவோர், கல்வி நிலையங்களில் இருந்து வரும் மாணவ, மாணவியர், சிகிச்சை பெறும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்படும் நிலையே உள்ளது. சீறிப் பாயும் காளைகளால் குடியிருப்பு மக்கள் மற்றும் பெண்கள், முதியோர், குழந்தைகள் விபத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

மாட்டுவண்டிப்போட்டி காலங்களில் இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பல கி.மீ தூரம் அதிகமாக பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலவிரயம், எரிபொருள் இழப்பு, வாகன பாகங்கள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் செண்பகராமன்புதூர்- ஒளவையார் அம்மன் கோவில் சாலையில் இப்போட்டிகளை நடத்தலாம். போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்திடும் வகையில் ஆரல்வாய்மொழி – செண்பகராமன்புதூர் வழித்தடத்தில் நடத்தப்படும் மாட்டுவண்டிப்போட்டிகளை நடத்த தடை விதிக்க வேண்டும். என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் தலைமை நிலையச் செயலாளர் S.ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச்செயலாளர் E சுரேஷ், தென்மண்டலச் செயலாளர் ஞாலம் T.ஜெகதீஷ், தென்மண்டல அமைப்புச்செயலாளர் Dr.S.நாகராஜன், குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் P.சந்திரா, குமரி (கிழக்கு) மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, செயலாளர் R. சாராபாய், அமைப்பு செயலாளர் CV.முருகன், பொருளாளர் பொன்.மாரியம்மாள், துணை செயலாளர் Y ராகுல், தோவாளை ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் S.கோகிலா, ஆரல்வாய்மொழி பேரூர் தலைவர் D சகாய பிரிட்டோ மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

ஆரல்வாய்மொழி சாலையில் மாட்டுவண்டிப்போட்டிக்கு தடை
செண்பகராமன்புதூர் சாலையில் மாட்டுவண்டிப்போட்டி நடத்த தடை
மாட்டுவண்டிப்போட்டியால் போக்குவரத்து பாதிப்பு - தடை கோரிக்கை
ஆரல்வாய்மொழி சாலையில் மாட்டுவண்டிப்போட்டியை தடுக்க கோரிக்கை
பொதுமக்கள் பாதிப்பு: மாட்டுவண்டிப்போட்டிக்கு தடை விதிக்க வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் மாட்டுவண்டிப்போட்டிக்கு மாற்று சாலை தேவை
போக்குவரத்து பாதிக்காத வகையில் மாட்டுவண்டிப்போட்டி நடத்த கோரிக்கை
ஆரல்வாய்மொழி-செண்பகராமன்புதூர் சாலை பாதுகாப்பு குறித்து கோரிக்கை
மாட்டுவண்டிப்போட்டியால் பொதுமக்கள் பாதிப்பு - சமூக பொதுநல இயக்கம்
சாலை போக்குவரத்துக்கு பாதிப்பு: மாட்டுவண்டிப்போட்டிக்கு தடை தேவை