Skip to content
நற்சிந்தனை! நற்சொல்! நற்செயல்!
பிரச்சினை தெரிவிக்க
← TNSPI VOICE

பழனி அருகே அரசுப்பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு – சமூக பொதுநல இயக்கம் கண்டனம்.

பழனி அருகே அரசுப்பள்ளி குடிநீர் தொட்டி சம்பவத்தைக் கண்டித்து மாணவர்களின் குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்ய TNSPI கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி காலாண்டு விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டபோது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கிடந்தது தெரியவந்தது. சுமார் 100 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில் விடுமுறை காலத்தில் பள்ளி பூட்டப்பட்டிருந்த நிலையில் மது அருந்த இங்கு வந்த சிலரால் இச்செயல் அரங்கேற்றப்பட்டு உள்ளது. குடிநீர் தொட்டியின் நீர் ஏற்றும் குழாயும் உடைந்த நிலையில் கிடந்து உள்ளது. சத்துணவுப் பணியாளர்கள் குடிநீர் தொட்டியினை சுத்தம் செய்வதற்காக பார்த்த போது இது தெரியவந்து உள்ளது.

தலைமை ஆசிரியர் ஜெயகுமார் உடனடியாக இத்தொட்டியினை சுத்தம் செய்து விட்டு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்ததாகவும் இத்தொட்டியில் இருந்து மாணவர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கிறார். இருப்பினும் நேற்று (புதன்) பெற்றோருக்கு இச்சம்பவம் தெரிய வந்ததும் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டதாக குற்றம் சாட்டி பள்ளி முன்பாக போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குபதிவு செய்து இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட இச்சம்பவம் அதிர்ச்சியினையும், வேதனையும் தருவதாக உள்ளது. இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

குடிநீரில் மனிதக்கழிவு கலக்கும் சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது மனிததன்மையற்ற, நாகரிக சமூகத்திற்கு ஏற்புடையது அல்லாத இழிசெயலாகும். கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ந்தேதி திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இதுபோல் குடிநீரில் கழிவு கலந்தது தெரியவந்தது. இதுபோல் ஆகஸ்ட்/2025ல் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அமச்சியாபுரம் கிராம மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்தது தெரியவந்தது. கடந்த 26.12.2022ல் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் கழிவு கலந்த சம்பவம் இன்னும் நம் நினைவை விட்டு நீங்கவில்லை.

பொது சுகாதாரத்துறை கடந்த ஜூன்.2024 ல் வீடுகளுக்கு வரும் குடிநீரை மாதந்தோறும் மாதிரி எடுத்து ஆய்வகப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறைபாடு தெரியவந்தால் உள்ளாட்சி உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. நீர்நிலைகள் மாசுபடுத்துவதை தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் தடை செய்து உள்ளது. ஆனால் அரசு தரப்பில் இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்திடும் நோக்கில் மாவட்டந்தோறும் நீர் தரநிர்ணய மையங்களை அமைக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறது. இதனால் உள்ளாட்சிகளின் அல்லது இதுபோன்ற அரசு பள்ளிகளின் குடிநீர் தரம் நிரூபிக்க முடியாத நிலையில் பாதிப்புகள் தொடர்வது தொடர்கதையாக நிகழ்கிறது.

குடிநீரை பாதுகாத்து வழங்க வேண்டியது அரசின் முக்கியக் கடமையாகும். இதன்படி உள்ளாட்சிகளில், அரசு பள்ளிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக, தரமானதாக வழங்க வேண்டியது முக்கியமானதாகும். ஆனால் பல மேல்நிலைத் தொட்டிகளில் பூட்டு/ குளோரினேஷன், மாதாந்திர பரிசோதனை/ சுத்தப்படுத்தும் நடவடிக்கை, சிசிடிவி கண்காணிப்பு உள்ளிட்ட எதுவுமே பின்பற்றப்படுவது இல்லை. இதனால் இந்நீரை பயன்படுத்துவோர் பாதிப்பில் இருந்து தப்ப முடியாத நிலையில் 2 அவதிப்படுகின்றனர். மானூர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு மேலும் இதுபோல் சம்பவங்கள் தொடராமல் தடுக்கும் விதத்தில் அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசர அவசியம்.

Drinking Water Tank Maintenance
Tamil Nadu Public Healt